• Sep 20 2024

பாம் புயலால் அலறும் அமெரிக்கா - 18 பேர் உயிரிழப்பு ... 7 லட்சம் பேர் தவிப்பு!

Tamil nila / Dec 25th 2022, 4:51 pm
image

Advertisement

அமெரிக்காவில் பாம் புயல் என்றழைக்கப்படும் பனிப்புயல் தாக்கம் அதிகமாக இருப்பதால், இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 


அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாம் புயல் தற்போது அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டிய இந்த காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். 


எனவே, அங்கு மக்களின் இயல்பு வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் பனிக்காலத்திற்கு என்று தயாராகிக்கொள்வார்கள். ஆனால், இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர்களால் நிம்மதியாக கொண்டாட இயலாதபடி பாம் புயல் ஒன்று உருவெடுத்துள்ளது. 


ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து கிளம்பியுள்ள புயலுக்கு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும்,  அதிக பனிப்பொழிவால் ஏற்பட்ட கார் விபத்துகளிலும் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், விடுமுறை தினங்களை முன்னிட்டு இயக்கப்பட இருந்த பல விமானங்கள் வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் விமான நிலையங்களிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். 


இந்த புயலால் அமெரிக்காவின் மத்தியகிழக்கின் மேல் பகுதியும், வடகிழக்கின் உள் நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா முழுவதும் புயல் வீசுவதால், மக்கள் இன்னும் கடுமையான பனி மற்றும் பனிப்புயல் நிலைமைகளைக் எதிர்கொண்டு வருகிறார்கள். 


பாம் புயலால், மேலும் மின்சாரம் தடைபடும் வாய்ப்பை குறித்து பல லட்சக்கணக்கான மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நாடு முழுவதும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.


கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று நியூயார்க்கை புரட்டி போட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சில நேரம், காற்றின் வேகம் மணிக்கு 60 மைல்களுக்கும் அதிகமாக இருந்தது. சில பகுதிகளில் 2 அடிக்கு மேல் கடுமையான பனி இருந்தது.



நேற்று வெப்பநிலை ஜீரோ டிகிரிக்குக்கும் கீழே இருந்தது. பனிப்புயல் நிலைமைகள் குறைந்தது இன்று காலை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளிர் மற்றும் வறண்ட காற்று ஒன்றுடன் ஒன்று மோதும் போது தான் பாம் புயல் உருவாகிறது என கூறப்படுகிறது.


அதாவது, சூடான காற்று மேலே எழும்பும்போது, ​​அது ஒரு மேக அமைப்பை உருவாக்கி காற்றழுத்தத்தைக் குறைக்கிறது என்றும், இது குறைந்த அழுத்தப் பகுதியைச் சுற்றி எதிரெதிர் திசையில் சுற்றும் போது புயலாக உருவாகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

பாம் புயலால் அலறும் அமெரிக்கா - 18 பேர் உயிரிழப்பு . 7 லட்சம் பேர் தவிப்பு அமெரிக்காவில் பாம் புயல் என்றழைக்கப்படும் பனிப்புயல் தாக்கம் அதிகமாக இருப்பதால், இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாம் புயல் தற்போது அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டிய இந்த காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். எனவே, அங்கு மக்களின் இயல்பு வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் பனிக்காலத்திற்கு என்று தயாராகிக்கொள்வார்கள். ஆனால், இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர்களால் நிம்மதியாக கொண்டாட இயலாதபடி பாம் புயல் ஒன்று உருவெடுத்துள்ளது. ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து கிளம்பியுள்ள புயலுக்கு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும்,  அதிக பனிப்பொழிவால் ஏற்பட்ட கார் விபத்துகளிலும் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், விடுமுறை தினங்களை முன்னிட்டு இயக்கப்பட இருந்த பல விமானங்கள் வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் விமான நிலையங்களிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த புயலால் அமெரிக்காவின் மத்தியகிழக்கின் மேல் பகுதியும், வடகிழக்கின் உள் நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா முழுவதும் புயல் வீசுவதால், மக்கள் இன்னும் கடுமையான பனி மற்றும் பனிப்புயல் நிலைமைகளைக் எதிர்கொண்டு வருகிறார்கள். பாம் புயலால், மேலும் மின்சாரம் தடைபடும் வாய்ப்பை குறித்து பல லட்சக்கணக்கான மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நாடு முழுவதும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று நியூயார்க்கை புரட்டி போட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சில நேரம், காற்றின் வேகம் மணிக்கு 60 மைல்களுக்கும் அதிகமாக இருந்தது. சில பகுதிகளில் 2 அடிக்கு மேல் கடுமையான பனி இருந்தது.நேற்று வெப்பநிலை ஜீரோ டிகிரிக்குக்கும் கீழே இருந்தது. பனிப்புயல் நிலைமைகள் குறைந்தது இன்று காலை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளிர் மற்றும் வறண்ட காற்று ஒன்றுடன் ஒன்று மோதும் போது தான் பாம் புயல் உருவாகிறது என கூறப்படுகிறது.அதாவது, சூடான காற்று மேலே எழும்பும்போது, ​​அது ஒரு மேக அமைப்பை உருவாக்கி காற்றழுத்தத்தைக் குறைக்கிறது என்றும், இது குறைந்த அழுத்தப் பகுதியைச் சுற்றி எதிரெதிர் திசையில் சுற்றும் போது புயலாக உருவாகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement