• May 19 2024

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா..!samugammedia

Sharmi / Jun 13th 2023, 11:40 am
image

Advertisement

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகியது.

குறிப்பாக காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய திருவிழா திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.

கொடியேற்றத்தை அடுத்து ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான வழிபாடுகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

திங்கட்கிழமை 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

திருவிழா தினமான 13 ஆம் திகதி இன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

இதேவேளை, பெருவிழா திருப்பலிகள் இன்றையதினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் தமிழ் மொழியில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

முற்பகல் 10 மணிக்கு சிங்களத்திலும் நண்பகல் 12 மணிக்கு ஆங்கிலத்திலும் திருவிழா திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன. அதன்பின்னர் மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி ஆரம்பமாகவுள்ளது.

 புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்திலிருந்து மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் பெருவிழா நிறைவுபெறும்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா.samugammedia கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகியது.குறிப்பாக காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய திருவிழா திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.கொடியேற்றத்தை அடுத்து ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான வழிபாடுகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.திங்கட்கிழமை 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது.திருவிழா தினமான 13 ஆம் திகதி இன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.இதேவேளை, பெருவிழா திருப்பலிகள் இன்றையதினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் தமிழ் மொழியில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.முற்பகல் 10 மணிக்கு சிங்களத்திலும் நண்பகல் 12 மணிக்கு ஆங்கிலத்திலும் திருவிழா திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன. அதன்பின்னர் மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி ஆரம்பமாகவுள்ளது. புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்திலிருந்து மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் பெருவிழா நிறைவுபெறும்.

Advertisement

Advertisement

Advertisement