• Apr 28 2024

இலங்கை கடற்பரப்பிற்குள் 11 மாதங்களில் 196 இந்திய மீனவர்கள் கைது..! samugammedia

Chithra / Nov 19th 2023, 4:06 pm
image

Advertisement

 

இந்த ஆண்டு இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 196 இந்திய மீனவர்களையும் 29 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை  பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று கைதான 22 இந்திய மீனவர்களும் இந்திய அரசாங்கத்தின் உயர் மட்ட அழுத்தத்தினால் இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டனர்.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் நேற்று மதியம் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுத்தனர்.

அதனையடுத்து, இன்று இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்கள்யும் விடுதலை செய்யுமாறு இலங்கை கடற்படைக்கு இலங்கை அரசாங்க உயர்மட்டத்தில் இருந்து உத்தரவு பறந்தது.

இந்நிலையில் 22 இந்திய மீனவர்களும் அவர்களது இரண்டு படகில் இன்று அதிகாலை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் 11 மாதங்களில் 196 இந்திய மீனவர்கள் கைது. samugammedia  இந்த ஆண்டு இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 196 இந்திய மீனவர்களையும் 29 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதேவேளை  பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று கைதான 22 இந்திய மீனவர்களும் இந்திய அரசாங்கத்தின் உயர் மட்ட அழுத்தத்தினால் இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டனர்.பருத்தித்துறைக் கடற்பரப்பில் நேற்று மதியம் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டன.கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுத்தனர்.அதனையடுத்து, இன்று இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்கள்யும் விடுதலை செய்யுமாறு இலங்கை கடற்படைக்கு இலங்கை அரசாங்க உயர்மட்டத்தில் இருந்து உத்தரவு பறந்தது.இந்நிலையில் 22 இந்திய மீனவர்களும் அவர்களது இரண்டு படகில் இன்று அதிகாலை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement