• Sep 19 2024

1983 வெலிக்கடை சிறைத் தாக்குதலில் தப்பிய சின்னராசா காலமானார்!SamugamMedia

Sharmi / Mar 1st 2023, 11:55 am
image

Advertisement

கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற இனக் கலவரத்தின்போது சிங்களக் கைதிகள் வெலிக்கடைச் சிறையில் நடத்திய தாக்குதலில் தப்பியவர்களில் ஒருவரும் தமிழர் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்துக்கு உதவியவருமான அன்ரன் பிலிப் சின்னராசா காலமானார்.

கரவெட்டியைச் சேர்ந்த இவர் புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலமானார்.

அன்ரன் பிலிப் சின்னராசா இயக்கங்களால் நீர்வேலி வங்கி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார்.

அருட்தந்தை சிங்கராயருடன் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதே வெலிக்கடை சிறைத் தாக்குதல் நடைபெற்றது.

இதில் அவர் தப்பினார். மட்டக்களப்பு சிறை உடைப்பின்போது இயக்கங் களால் மீட்கப்பட்ட இவர் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் திருமண பந்தத்தில் இணைந்து கனடாவில் வாழ்ந்து வந்தார். புலம்பெயர் தேசத்தில் இருந்தவாறு தாயகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பிலிருந்த அவர் பல்வேறு நலத் திட்டங்களை மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1983 வெலிக்கடை சிறைத் தாக்குதலில் தப்பிய சின்னராசா காலமானார்SamugamMedia கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற இனக் கலவரத்தின்போது சிங்களக் கைதிகள் வெலிக்கடைச் சிறையில் நடத்திய தாக்குதலில் தப்பியவர்களில் ஒருவரும் தமிழர் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்துக்கு உதவியவருமான அன்ரன் பிலிப் சின்னராசா காலமானார்.கரவெட்டியைச் சேர்ந்த இவர் புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலமானார். அன்ரன் பிலிப் சின்னராசா இயக்கங்களால் நீர்வேலி வங்கி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார்.அருட்தந்தை சிங்கராயருடன் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதே வெலிக்கடை சிறைத் தாக்குதல் நடைபெற்றது. இதில் அவர் தப்பினார். மட்டக்களப்பு சிறை உடைப்பின்போது இயக்கங் களால் மீட்கப்பட்ட இவர் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் திருமண பந்தத்தில் இணைந்து கனடாவில் வாழ்ந்து வந்தார். புலம்பெயர் தேசத்தில் இருந்தவாறு தாயகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பிலிருந்த அவர் பல்வேறு நலத் திட்டங்களை மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement