• Apr 02 2025

மாங்குளம் பிரதேசத்துக்கான 1990 அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்...! மக்கள் விசனம்...!samugammedia

Sharmi / Feb 6th 2024, 4:11 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990)  கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள  மக்கள் பெரும் துன்பங்கங்களை சந்தித்து வருகின்றனர். 

குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் (1990) வண்டியானது  பிரதானமாக ஏ 9 வீதியில் இடம்பெறும் விபத்துக்களின் போதும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாண்டியகுளம், நட்டாங்கண்டல்,  மல்லாவி, கோட்டை கட்டிய குளம், அம்பலபெருமாள் மற்றும் அம்பகாமம் தட்சடம்பன் ஒலுமடு உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களுக்கும் இந்துபுரம், வசந்தபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கும்  நாளாந்தம் இந்த சேவையை பெற்று வரும் நிலையில் தற்போது மூன்று மாதங்களாக இந்த அம்புலன்ஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால்  மக்கள் பல்வேறு துன்பங்களுக்குள்  தள்ளப்பட்டுள்னர்.

குறிப்பாக, நட்டாங்கண்டல் போன்ற பகுதிகளில் இருந்து நோயாளர்கள் சுமார் 3000 ரூபாய் வரையில் ஆட்டோவுக்கு செலவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆகவே, இந்த அம்புலன்ஸ் சேவையை மீண்டும்  மிக விரைவாக இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்


மாங்குளம் பிரதேசத்துக்கான 1990 அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம். மக்கள் விசனம்.samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990)  கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள  மக்கள் பெரும் துன்பங்கங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் (1990) வண்டியானது  பிரதானமாக ஏ 9 வீதியில் இடம்பெறும் விபத்துக்களின் போதும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாண்டியகுளம், நட்டாங்கண்டல்,  மல்லாவி, கோட்டை கட்டிய குளம், அம்பலபெருமாள் மற்றும் அம்பகாமம் தட்சடம்பன் ஒலுமடு உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களுக்கும் இந்துபுரம், வசந்தபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கும்  நாளாந்தம் இந்த சேவையை பெற்று வரும் நிலையில் தற்போது மூன்று மாதங்களாக இந்த அம்புலன்ஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால்  மக்கள் பல்வேறு துன்பங்களுக்குள்  தள்ளப்பட்டுள்னர்.குறிப்பாக, நட்டாங்கண்டல் போன்ற பகுதிகளில் இருந்து நோயாளர்கள் சுமார் 3000 ரூபாய் வரையில் ஆட்டோவுக்கு செலவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.ஆகவே, இந்த அம்புலன்ஸ் சேவையை மீண்டும்  மிக விரைவாக இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

Advertisement

Advertisement

Advertisement