• Apr 28 2024

12மணிநேரத்திற்குள் 2 துப்பாக்கிச்சூடு – அச்சத்தில் உறைந்துள்ள தென்பகுதி மக்கள்..!samugammedia

Sharmi / May 27th 2023, 11:30 am
image

Advertisement

கடந்த 12 மணித்தியாலத்திற்குள் இரண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் தென்பகுதி மக்களிடையே மீண்டும் பாதாள உலக குழுக்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

கடந்த 25ஆம் திகதி இரவு மற்றும் நேற்று காலையில் இந்த இரண்டு சம்பவங்களும் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளன.

அம்பலாங்கொடை, ரன்டோம்பே, பலப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரதி அதிபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அம்பலாங்கொடை வத்துகெட, அண்டடோல பிரதேசத்தில் கடந்த 25ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதேவேளை 2023ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 26 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் தென்மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 19 பேர் பலியாகியுள்ளதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொலைச் சம்பவங்களும் அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகின்றது.

12மணிநேரத்திற்குள் 2 துப்பாக்கிச்சூடு – அச்சத்தில் உறைந்துள்ள தென்பகுதி மக்கள்.samugammedia கடந்த 12 மணித்தியாலத்திற்குள் இரண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் தென்பகுதி மக்களிடையே மீண்டும் பாதாள உலக குழுக்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.கடந்த 25ஆம் திகதி இரவு மற்றும் நேற்று காலையில் இந்த இரண்டு சம்பவங்களும் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளன.அம்பலாங்கொடை, ரன்டோம்பே, பலப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரதி அதிபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை அம்பலாங்கொடை வத்துகெட, அண்டடோல பிரதேசத்தில் கடந்த 25ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இதேவேளை 2023ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 26 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் தென்மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 19 பேர் பலியாகியுள்ளதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, நாட்டில் கொலைச் சம்பவங்களும் அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement