• May 06 2025

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; அமைதியான முறையில் வாக்களித்துவரும் மக்கள்; பாதுகாப்பும் தீவிரம்

Chithra / May 6th 2025, 10:59 am
image


இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு  13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில்  இன்று (06) காலை 7.00மணிக்கு ஆரம்பமானது.  வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது. 

வாக்குப்பதிவு மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த முறை தேர்தலில், 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  


மன்னார்

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கு பதிவுகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 5 உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

மன்னார் நகர சபையில் 18 உறுப்பினர்களும்,மன்னார் பிரதேச சபையில் 23 உறுப்பினர்களும்,நானாட்டான் பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும்,முசலி பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும்,மாந்தை மேற்கு பிரதேச சபையில் 24 உறுப்பினர்களும் உள்ளடங்களாக கட்சி மற்றும் சுயேற்சைக் குழு சார்பாக 103 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

அவர்களில் மன்னார் நகரசபைக்கு 15 உறுப்பினர்களும், மன்னார் பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களும், நானாட்டான் பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும், முசலி பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களுமாக மொத்தம் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 114 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.

வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கும் உரிய பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணம்


மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3,519 வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றனர்.

மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில், 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.


கிளிநொச்சி


இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் தற்பொழுது வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கினை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தமது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்


வவுனியா

 

அத்துடன் வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பதையும் அவதானிக்க முடிகிறது.


வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 சபைகளுக்கும் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1731 பேர் போட்டியிடுகின்றனர்.


ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 154 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  


முல்லைத்தீவு


மேலும் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும், வாக்களிக்க தகுதிபெற்ற 87800 பேர் இன்றையதினம் வாக்களிக்க இருக்கின்றனர். 

அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக  1291 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 274 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கின்றதுடன் நடமாடும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.

 


திருகோணமலை

இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள  13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து 136 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 நுவரேலியா 

அத்தோடு நுவரேலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்கு 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.


அதன்படி இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 6,10,117 ஆகும், இதில் 18,342 பேர் அஞ்சல் வாக்காளர்களாகும்.


நுவரெலியா மாவட்டத்தில் 540 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.


மேலும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக 6,352 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இதில் போக்குவரத்துக்காக அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அடங்கலாக 672 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


அதேபோன்று மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.


2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; அமைதியான முறையில் வாக்களித்துவரும் மக்கள்; பாதுகாப்பும் தீவிரம் இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு  13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில்  இன்று (06) காலை 7.00மணிக்கு ஆரம்பமானது.  வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது. வாக்குப்பதிவு மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும்.339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.இந்த முறை தேர்தலில், 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  மன்னார்இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கு பதிவுகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.மன்னார் மாவட்டத்தில் 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 5 உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.மன்னார் நகர சபையில் 18 உறுப்பினர்களும்,மன்னார் பிரதேச சபையில் 23 உறுப்பினர்களும்,நானாட்டான் பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும்,முசலி பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும்,மாந்தை மேற்கு பிரதேச சபையில் 24 உறுப்பினர்களும் உள்ளடங்களாக கட்சி மற்றும் சுயேற்சைக் குழு சார்பாக 103 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.அவர்களில் மன்னார் நகரசபைக்கு 15 உறுப்பினர்களும், மன்னார் பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களும், நானாட்டான் பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும், முசலி பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களுமாக மொத்தம் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் 114 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கும் உரிய பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாணம்மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3,519 வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றனர்.மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில், 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.கிளிநொச்சிஇதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் தற்பொழுது வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கினை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தமது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்வவுனியா அத்துடன் வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பதையும் அவதானிக்க முடிகிறது.வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 சபைகளுக்கும் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1731 பேர் போட்டியிடுகின்றனர்.ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 154 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  முல்லைத்தீவுமேலும் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும், வாக்களிக்க தகுதிபெற்ற 87800 பேர் இன்றையதினம் வாக்களிக்க இருக்கின்றனர். அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக  1291 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 274 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கின்றதுடன் நடமாடும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது. திருகோணமலைஇந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.திருகோணமலை மாவட்டத்தில் உள்ள  13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து 136 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  நுவரேலியா அத்தோடு நுவரேலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்கு 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.அதன்படி இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 6,10,117 ஆகும், இதில் 18,342 பேர் அஞ்சல் வாக்காளர்களாகும்.நுவரெலியா மாவட்டத்தில் 540 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.மேலும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக 6,352 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதில் போக்குவரத்துக்காக அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அடங்கலாக 672 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.அதேபோன்று மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement