• Oct 21 2026

2027 வரவு செலவுத்திட்டம்.! நாவிதன்வெளி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Aathira / Oct 21st 2026, 11:48 am
image

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரைவு வரவு செலவுத்திட்டம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் இந்த வரைவு வரவு செலவுத்திட்டம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் அபிவிருத்தித் தேவைகள், பொதுச் சேவைகளை மேம்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.

இதற்காக வரைவு வரவு செலவுத்திட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் பொது நூலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பொதுமக்கள், சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள் உள்ளிட்ட ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினரும் இதனைப் பார்வையிட்டு தமது ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க முடியும்.

அத்துடன், வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் பிரதேசத்தின் நலன் சார்ந்த புதிய முன்மொழிவுகளையும் எழுத்துமூலம் சமர்ப்பிக்கலாம்.

தமது கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர், நாவிதன்வெளி பிரதேச சபையின் செயலாளர் அல்லது தவிசாளரிடம் நேரடியாக ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டமிடலில் பொதுமக்களின் கருத்துக்களையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் நோக்கில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பிரதேச சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

2027 வரவு செலவுத்திட்டம். நாவிதன்வெளி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரைவு வரவு செலவுத்திட்டம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் இந்த வரைவு வரவு செலவுத்திட்டம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.பிரதேசத்தின் அபிவிருத்தித் தேவைகள், பொதுச் சேவைகளை மேம்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.இதற்காக வரைவு வரவு செலவுத்திட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் பொது நூலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பொதுமக்கள், சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள் உள்ளிட்ட ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினரும் இதனைப் பார்வையிட்டு தமது ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க முடியும்.அத்துடன், வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் பிரதேசத்தின் நலன் சார்ந்த புதிய முன்மொழிவுகளையும் எழுத்துமூலம் சமர்ப்பிக்கலாம்.தமது கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர், நாவிதன்வெளி பிரதேச சபையின் செயலாளர் அல்லது தவிசாளரிடம் நேரடியாக ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டமிடலில் பொதுமக்களின் கருத்துக்களையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் நோக்கில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பிரதேச சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement