• Apr 28 2026

25 இந்திய மீனவர்கள் இரு படகுகளுடன் கைது

Aathira / Feb 16th 2026, 12:57 pm
image

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று (15) மற்றும் இன்று (16) ஆகிய தினங்களில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் காங்கேசன்துறை கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

25 இந்திய மீனவர்கள் இரு படகுகளுடன் கைது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று (15) மற்றும் இன்று (16) ஆகிய தினங்களில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் காங்கேசன்துறை கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement