• Apr 10 2025

பதுளையில் மனித பாவனைக்கு ஒவ்வாத 2,900Kg கோதுமை மா கண்டுபிடிப்பு!

Tamil nila / Dec 7th 2024, 8:52 pm
image

பதுளை கணுபெலல்ல பகுதியில் உள்ள தனியார் களஞ்சியசாலையில் மனித பாவனைக்கு ஒவ்வாத சுமார் 2,900 கிலோகிராம் கோதுமை மா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 இதனையடுத்து குறித்த களஞ்சியசாலையின் முகாமையாளர், பொது சுகாதார பரிசோதகர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 மாநகர சபையின் டெங்கு ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பாரியளவான கோதுமை மா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. 

 எலிகளால் சேதப்படுத்தப்பட்ட குறித்த கோதுமை மா தொகுதி, விற்பனைக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 கைது செய்யப்பட்ட களஞ்சியசாலையின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் குற்றச்சாட்டில் பதுளை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.

பதுளையில் மனித பாவனைக்கு ஒவ்வாத 2,900Kg கோதுமை மா கண்டுபிடிப்பு பதுளை கணுபெலல்ல பகுதியில் உள்ள தனியார் களஞ்சியசாலையில் மனித பாவனைக்கு ஒவ்வாத சுமார் 2,900 கிலோகிராம் கோதுமை மா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து குறித்த களஞ்சியசாலையின் முகாமையாளர், பொது சுகாதார பரிசோதகர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.  மாநகர சபையின் டெங்கு ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பாரியளவான கோதுமை மா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.  எலிகளால் சேதப்படுத்தப்பட்ட குறித்த கோதுமை மா தொகுதி, விற்பனைக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  கைது செய்யப்பட்ட களஞ்சியசாலையின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் குற்றச்சாட்டில் பதுளை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement