ஒரு கோடி ரூபா பெறுமதியான 500 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா - எல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா - எல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஜா - எல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் என்று ஜா - எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது ஒரு கோடி ரூபா பெறுமதியான 500 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜா - எல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஜா - எல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஜா - எல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் என்று ஜா - எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.