• May 19 2024

அசாதாரண காலநிலையால் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு! samugammedia

Tamil nila / Oct 19th 2023, 3:36 pm
image

Advertisement

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர், மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், மேல், மத்திய, கிழக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஆற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


அசாதாரண காலநிலையால் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு samugammedia நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர், மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேநேரம், மேல், மத்திய, கிழக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன் மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த ஆற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement