• Jan 19 2026

நாடு முழுவதும் ஒரே நாளில் 30,000 பேர் சோதனை; 596 பேர் அதிரடிக் கைது!

shanuja / Jan 17th 2026, 5:46 pm
image

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 


நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக, பொலிஸ் பிரிவுகள் மட்டத்தில் அனைத்து பிரதேச பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த விசேட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். 


அதற்கமைய, நேற்று (16) பொலிஸாரால் 30,386 பேர் சோதனையிடப்பட்டதுடன், இதன்போது சந்தேகத்தின் பேரில் 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அத்துடன் இந்த நடவடிக்கையின் போது, குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 18 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 268 பேரும், திறந்த பிடியாணை  கொண்ட 184 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் ஒரே நாளில் 30,000 பேர் சோதனை; 596 பேர் அதிரடிக் கைது குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக, பொலிஸ் பிரிவுகள் மட்டத்தில் அனைத்து பிரதேச பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த விசேட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். அதற்கமைய, நேற்று (16) பொலிஸாரால் 30,386 பேர் சோதனையிடப்பட்டதுடன், இதன்போது சந்தேகத்தின் பேரில் 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த நடவடிக்கையின் போது, குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 18 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 268 பேரும், திறந்த பிடியாணை  கொண்ட 184 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement