• Apr 04 2025

தேர்தல் தொடர்பில் குவியும் முறைப்பாடுகள் - சட்டத்தை மீறிய 32 பேர் கைது!

Chithra / Mar 25th 2025, 1:05 pm
image


எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இரு வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு நேற்று திங்கட்கிழமை இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள  வேட்பாளர் ஒருவரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சமூக ஊடகங்களில் காணொளிகளை பதிவிட்டுள்ளதாக பொலன்னறுவை - சிறிபுர பொலிஸ் நிலையத்திற்கு  முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக பெரிய கட்டவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக  மாத்தளை - மஹவெல பொலிஸ் நிலையத்திற்கு நேற்றைய தினம் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். 

கைதானவர்களில் 10 வேட்பாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 16 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.


தேர்தல் தொடர்பில் குவியும் முறைப்பாடுகள் - சட்டத்தை மீறிய 32 பேர் கைது எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இரு வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு நேற்று திங்கட்கிழமை இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள  வேட்பாளர் ஒருவரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சமூக ஊடகங்களில் காணொளிகளை பதிவிட்டுள்ளதாக பொலன்னறுவை - சிறிபுர பொலிஸ் நிலையத்திற்கு  முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக பெரிய கட்டவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக  மாத்தளை - மஹவெல பொலிஸ் நிலையத்திற்கு நேற்றைய தினம் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.இந்நிலையில் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். கைதானவர்களில் 10 வேட்பாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 16 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now