சுங்க தரப்பினரின் சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்களில் போதைப்பொருள் அல்லது சட்டவிரோத பொருட்கள் அடங்கியிருந்தால் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என பிரதியமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் ஹோமாகமை பேருந்து சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாள் ஒன்றுக்கு 600 கொள்கலன்களை மாத்திரமே சோதனை செய்ய முடியும்.
எனினும், 2 ஆயிரத்திற்கும் அதிகமான கொள்கலன்களை நாள் ஒன்றில் துறைமுகத்திற்கு விடுவிக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது.
கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே சுங்க தரப்பினரால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பிரதியமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் - பொறுப்பை ஏற்கும் அரசு சுங்க தரப்பினரின் சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்களில் போதைப்பொருள் அல்லது சட்டவிரோத பொருட்கள் அடங்கியிருந்தால் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என பிரதியமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபையின் ஹோமாகமை பேருந்து சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நாள் ஒன்றுக்கு 600 கொள்கலன்களை மாத்திரமே சோதனை செய்ய முடியும்.எனினும், 2 ஆயிரத்திற்கும் அதிகமான கொள்கலன்களை நாள் ஒன்றில் துறைமுகத்திற்கு விடுவிக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது.கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே சுங்க தரப்பினரால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பிரதியமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.