• May 04 2024

33000 லீற்றர் எரிபொருள் கொள்ளையா? இலங்கை துறைமுக அதிகாரசபை வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Sep 12th 2023, 5:24 pm
image

Advertisement

 

இலங்கை துறைமுக அதிகாரசபையில் 33000 லீற்றர் எரிபொருள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் பொறியியலாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை துறைமுக அதிகாரசபை பொறியியலாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 6ஆம் திகதி ஊடகமொன்று 'இலங்கை துறைமுக அதிகாரசபையில் 33000 லீற்றர் எரிபொருள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பொறியியலாளர் மற்றும் சாரதி கைது' என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது போலியான தகவலை அடிப்படையாகக் கொண்ட செய்தியாகும்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் வேறொரு பிரிவின் தொழிநுட்ப பிரிவின் அதிகாரியொருவரும் , அதே பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவருமே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் துறைமுக அதிகாரசபையின் பொறியியலாளர்கள் எவரும் இதன் போது கைது செய்யப்படவில்லை. இவ்வாறான போலியான செய்திகளை சமூகமயப்படுத்துவதன் ஊடாக இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அதன் பொறியியலாளர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுகிறது. 

எனவே ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட முன்னர், உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

33000 லீற்றர் எரிபொருள் கொள்ளையா இலங்கை துறைமுக அதிகாரசபை வெளியிட்ட தகவல் samugammedia  இலங்கை துறைமுக அதிகாரசபையில் 33000 லீற்றர் எரிபொருள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் பொறியியலாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை துறைமுக அதிகாரசபை பொறியியலாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.இது தொடர்பில் அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த 6ஆம் திகதி ஊடகமொன்று 'இலங்கை துறைமுக அதிகாரசபையில் 33000 லீற்றர் எரிபொருள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பொறியியலாளர் மற்றும் சாரதி கைது' என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது போலியான தகவலை அடிப்படையாகக் கொண்ட செய்தியாகும்.இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் வேறொரு பிரிவின் தொழிநுட்ப பிரிவின் அதிகாரியொருவரும் , அதே பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவருமே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.எனினும் துறைமுக அதிகாரசபையின் பொறியியலாளர்கள் எவரும் இதன் போது கைது செய்யப்படவில்லை. இவ்வாறான போலியான செய்திகளை சமூகமயப்படுத்துவதன் ஊடாக இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அதன் பொறியியலாளர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுகிறது. எனவே ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட முன்னர், உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement