• May 01 2024

நல்லூரில் பொலித்தீன் பைகளை வைத்திருந்த 35 கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை! samugammedia

Chithra / Aug 29th 2023, 2:55 pm
image

Advertisement

நல்லூர் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பைகளை வைத்திருந்த 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால்  நேற்றைய தினம் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் கடந்த 08 மாத கால பகுதியில், தடை செய்யப்பட்ட பொலித்தீன்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் மகோற்சவ காலங்களில் ஆலய சூழலில், கச்சான் கடைகள் , இனிப்பு கடைகள் , காரம் சுண்டல் கடைகள் என  பெருமளவான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கடைகளில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனைகள் அதிகளவில் காணப்படுவதாக முறைப்பாடுகள்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சோதனை நடவடிக்கையில் இறங்கிய மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் பொலித்தீன் பைகளை வைத்திருந்த   35 கடை உரிமையாளர்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளதோடு இனிவரும் நாட்களிலும் இவ்வாறு செய்தால்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

நல்லூரில் பொலித்தீன் பைகளை வைத்திருந்த 35 கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை samugammedia நல்லூர் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பைகளை வைத்திருந்த 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால்  நேற்றைய தினம் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.யாழ்.மாவட்டத்தில் கடந்த 08 மாத கால பகுதியில், தடை செய்யப்பட்ட பொலித்தீன்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நல்லூர் மகோற்சவ காலங்களில் ஆலய சூழலில், கச்சான் கடைகள் , இனிப்பு கடைகள் , காரம் சுண்டல் கடைகள் என  பெருமளவான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கடைகளில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனைகள் அதிகளவில் காணப்படுவதாக முறைப்பாடுகள்  தெரிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் சோதனை நடவடிக்கையில் இறங்கிய மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் பொலித்தீன் பைகளை வைத்திருந்த   35 கடை உரிமையாளர்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளதோடு இனிவரும் நாட்களிலும் இவ்வாறு செய்தால்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement