• Jun 02 2024

மனைவியை பழி தீர்க்கும் நோக்கில் 4 வயது மகளுக்கு தந்தையால் நேர்ந்த கதி!

Tamil nila / Feb 10th 2023, 5:57 pm
image

Advertisement

கனடாவில் நபர் ஒருவர், தனது முன்னாள் மனைவியை பழி தீர்க்கும் நோக்கில் 4 வயதான மகளை படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் குறித்த சிறுமியும் அவரது தந்தையும் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் மூலம் இது ஓர் பழிவாங்கும் செயல் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


ஒன்றாரியோவின் மில்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.கெய்ரா காகன் என்ற 4 வயது சிறுமியே இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.


கெய்ராவின் தாய், தந்தையிடமிருந்து விவகாரத்து பெற்றுக் கொண்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என வீட்டு வன்முறைகள் தொடர்பிலான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


சிறுமியை கொலை செய்தாக குற்றம் சுமத்தப்பட்ட நபரின் நடவடிக்கைகள் குறித்து சிறுமியின் தாய் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதிலும் அவை குறித்து உரிய முறையில் கவனம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 


மனைவியை பழி தீர்க்கும் நோக்கில் 4 வயது மகளுக்கு தந்தையால் நேர்ந்த கதி கனடாவில் நபர் ஒருவர், தனது முன்னாள் மனைவியை பழி தீர்க்கும் நோக்கில் 4 வயதான மகளை படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் குறித்த சிறுமியும் அவரது தந்தையும் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் மூலம் இது ஓர் பழிவாங்கும் செயல் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.ஒன்றாரியோவின் மில்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.கெய்ரா காகன் என்ற 4 வயது சிறுமியே இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.கெய்ராவின் தாய், தந்தையிடமிருந்து விவகாரத்து பெற்றுக் கொண்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என வீட்டு வன்முறைகள் தொடர்பிலான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சிறுமியை கொலை செய்தாக குற்றம் சுமத்தப்பட்ட நபரின் நடவடிக்கைகள் குறித்து சிறுமியின் தாய் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதிலும் அவை குறித்து உரிய முறையில் கவனம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement