• Sep 30 2025

457 பிரதிநிதிகள் கோப் குழுவுக்கு அழைப்பு

Chithra / Sep 28th 2025, 3:30 pm
image

 

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் (COPE) அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 

எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தெரிவித்தார். 

கோப் குழுவினால் முன்னெடுக்கப்படும் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது கோப் குழு 457 அரச நிறுவனங்களைக் கொண்டுள்ளது. 

இந்நிலையில் அந்த நிறுவனங்களின் செயலாளர்களுக்கு இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கணக்காய்வுகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த அடிப்படை தகவல்களைப் பெற இதன்போது திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த கலந்துரையாடல் ஒக்டோபர் 2 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

457 பிரதிநிதிகள் கோப் குழுவுக்கு அழைப்பு  அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் (COPE) அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தெரிவித்தார். கோப் குழுவினால் முன்னெடுக்கப்படும் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கோப் குழு 457 அரச நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனங்களின் செயலாளர்களுக்கு இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கணக்காய்வுகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த அடிப்படை தகவல்களைப் பெற இதன்போது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் ஒக்டோபர் 2 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement