• May 08 2024

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 54 இலங்கையர்கள்! samugammedia

Chithra / Aug 16th 2023, 10:07 am
image

Advertisement

 இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 54 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL230 விமானம் மூலம் 53 பெண்களும் ஒரு ஆணும் நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர்.

செல்லுபடியாகும் வீசா காலத்தை தாண்டி குவைத்தில் தங்கியிருப்பது, பணியிடத்தை விட்டு ஓடி, வேறு இடங்களில் பணிபுரிவது போன்ற காரணங்களால் இவர்கள் நாட்டிற்கு வர முடியாமல் தவித்தவர்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் தொழிலுக்காக சென்று நாட்டிற்கு வரமுடியாமல் பாதுகாப்பான வீடுகளில் தங்கியுள்ள தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த பணியகத்தின் தலைவர், தூதரகங்களின் தொழிலாளர் நலன் பிரிவு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, குவைத் தூதரகத்தில் பதிவு செய்து குடிவரவுத் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் உரிய தகவல்களை சமர்ப்பித்து ஒரு நாளில் இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.


குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 54 இலங்கையர்கள் samugammedia  இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 54 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL230 விமானம் மூலம் 53 பெண்களும் ஒரு ஆணும் நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர்.செல்லுபடியாகும் வீசா காலத்தை தாண்டி குவைத்தில் தங்கியிருப்பது, பணியிடத்தை விட்டு ஓடி, வேறு இடங்களில் பணிபுரிவது போன்ற காரணங்களால் இவர்கள் நாட்டிற்கு வர முடியாமல் தவித்தவர்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.வெளிநாடுகளில் தொழிலுக்காக சென்று நாட்டிற்கு வரமுடியாமல் பாதுகாப்பான வீடுகளில் தங்கியுள்ள தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த பணியகத்தின் தலைவர், தூதரகங்களின் தொழிலாளர் நலன் பிரிவு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அதற்கமைய, குவைத் தூதரகத்தில் பதிவு செய்து குடிவரவுத் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் உரிய தகவல்களை சமர்ப்பித்து ஒரு நாளில் இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement