• May 18 2024

நா.சந்திரசேகர் ஐயாவுக்கு ஈழத் தமிழர் சார்பில் இதய அஞ்சலி - சபா குகதாஸ் samugammedia

Chithra / Aug 16th 2023, 10:12 am
image

Advertisement

நீண்ட காலம் ஈழத் தமிழரின் விடுதலையில் தீவிர பற்றும் உறுதியான செயற்பாடுகளும் கொண்டிருந்த நா.சந்திரசேகர், விடுதலைப் புலிகளின் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக பல செயற்பாடுகளை முன்னெடுத்தார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் நேற்று (14.08.2023) இயற்கை எய்தியுள்ளார்  என்பதை அக்கட்சியின் தலைமை அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சபா குகதாஸ்  இன்று (16.08.2023) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியத் தமிழகத்தில் தடா சட்டம் திரும்பிய போது அதனை எதிர்த்து சிரேஷ்ட வழக்கறிஞராக நீதிமன்றில் தொடர்ச்சியாக வாதாடி வந்தவர்.

அதனால் தான் தடா சந்திரசேகர் என அழைக்கப்பட்டார். கடந்த காலத்தில் ஈழ விடுதலை தொடர்பான மிக உணர்ச்சிகரமான பேச்சுக்களைப் புலம்பெயர் தேசங்களில் சென்று பொது மேடைகளில் பகிர்ந்து கொண்டவர்.

மிகவும் தீவிரமாக ஈழத் தமிழர்களையும் அவர்களது விடுதலையையும் நேசித்தவர். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக மிகப் பெரும் பணிகளை ஆற்றி வந்தவர் அன்னாரின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

சந்திரசேகருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் இதய அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


நா.சந்திரசேகர் ஐயாவுக்கு ஈழத் தமிழர் சார்பில் இதய அஞ்சலி - சபா குகதாஸ் samugammedia நீண்ட காலம் ஈழத் தமிழரின் விடுதலையில் தீவிர பற்றும் உறுதியான செயற்பாடுகளும் கொண்டிருந்த நா.சந்திரசேகர், விடுதலைப் புலிகளின் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக பல செயற்பாடுகளை முன்னெடுத்தார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் நேற்று (14.08.2023) இயற்கை எய்தியுள்ளார்  என்பதை அக்கட்சியின் தலைமை அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சபா குகதாஸ்  இன்று (16.08.2023) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியத் தமிழகத்தில் தடா சட்டம் திரும்பிய போது அதனை எதிர்த்து சிரேஷ்ட வழக்கறிஞராக நீதிமன்றில் தொடர்ச்சியாக வாதாடி வந்தவர்.அதனால் தான் தடா சந்திரசேகர் என அழைக்கப்பட்டார். கடந்த காலத்தில் ஈழ விடுதலை தொடர்பான மிக உணர்ச்சிகரமான பேச்சுக்களைப் புலம்பெயர் தேசங்களில் சென்று பொது மேடைகளில் பகிர்ந்து கொண்டவர்.மிகவும் தீவிரமாக ஈழத் தமிழர்களையும் அவர்களது விடுதலையையும் நேசித்தவர். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக மிகப் பெரும் பணிகளை ஆற்றி வந்தவர் அன்னாரின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.சந்திரசேகருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் இதய அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement