• May 19 2024

நிபந்தனையுடன் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தயார்...! ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி..!samugammedia

Sharmi / Aug 16th 2023, 10:20 am
image

Advertisement

நிபந்தனைகளின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கவனம் செலுத்தியுள்ளதாக
ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவாராயின், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க வேண்டும் எனும்
நிபந்தனையுடன் ஆதரவளிக்க வேண்டுமென கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறித்த நிபந்தனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளதாகவும், சஜித் பிரேமதாசாவை பிரதமராகும் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசாவை பிரதமராக நியமிப்பார் என்பதுவெளிப்படையானது எனவும்,
இந்த விடயத்தில் புதிய ஒப்பந்தமொன்று அவசியமற்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த விடயத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிபந்தனையுடன் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தயார். ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி.samugammedia நிபந்தனைகளின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கவனம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக தரப்பு தகவல்கள் கூறுகின்றன.இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவாராயின், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் ஆதரவளிக்க வேண்டுமென கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறித்த நிபந்தனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளதாகவும், சஜித் பிரேமதாசாவை பிரதமராகும் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.இந்த நிலையில், பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசாவை பிரதமராக நியமிப்பார் என்பதுவெளிப்படையானது எனவும், இந்த விடயத்தில் புதிய ஒப்பந்தமொன்று அவசியமற்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இருப்பினும், இந்த விடயத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement