• Nov 25 2024

அறுபது இலட்சம் ரூபா வலைகள் நாசம் : இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுவோம் - மீனவ சங்கங்கள் எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Dec 8th 2023, 9:39 pm
image

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி அதிகரித்துள்ள நிலையில் விரைவில் யாழ்ப்பாணம் இந்தியத் தூதரத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சமாசத் தலைவர் செல்லத்துரை நற்குணம் எச்சரிக்கை விடுத்தார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆறாம் திகதி யாழ்ப்பாண மாவட்ட கடற் பரப்புகளில் அத்துமீறி வருகை தரும் இந்தியா ரோலர் படகுகளினால் எமது மீனவர்களின் சுமார் 60 இலட்சத்துக்கு அதிகமான மீன்பிடி வலைகள் அறுத்து நாசம் செய்துள்ளது .

இந்தியா இல்லை தாண்டி மீனவர்களினால் பல வருட காலமாக எமது மீனவ மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் கடற்த்தொழில் உபகரணங்களையும் இழந்துள்ள நிலையில் எவ்விதமான இழப்பீடுகளும் கிடைக்கப் பெறவில்லை.

அண்மையில் கூட அத்து மீறிய இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கிப் போராட்டம் நடத்தியதோடு இலங்கை ஜனாதிபதி கடற் தொழில் அமைச்சர் மற்றும் இந்தியா பிரதமருக்கு அனுப்புமாறு எமது கோரிக்கை மஜகரை அரசாங்க அதிபரிடம் கையளித்தோம்.

ஆனால் எமது கோரிக்கைக்கு எவ் விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது கடந்த ஆறாம் திகதி இந்திய மீனவர்களினால் எமது மீனவர்களின் வலைகள் அறுத்து நாசம் செய்ததோடு மீன்களும் எள்ளிச் செல்லப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையால் யாழ் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம் எவ்விதமான கரிசனையும் கொள்ளவில்லை.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பல மீனவக் குடும்பங்கள் வாழ வழி இன்றி காணப்படும் நிலையில் எமது தொப்புக் கொடி உறவுகள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையே அழித்து வருகின்றனர்.

ஆகவே இந்திய எல்லை தாண்டிய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதோடு தொடர்ந்து இந்திய மீனவர்களின் வருகை அதிகரிக்குமானால் யாழில் உள்ள இந்தியத் துனைத் தூதரகத்தை முடக்கிப் போராட்டம் நடத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார் .

குறித்த ஊடக சந்திப்பில் கடற் தொழிலாளர் கிராமிய அமைப்பின் உப தலைவர் அந்தோணி பிள்ளை மரியதாஸ் மற்றும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன பொருளாளரும் வலி வடக்கு கடற்தொழிலாளர் கிராமிய அமைப்பின் உப தலைவருமான மகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


அறுபது இலட்சம் ரூபா வலைகள் நாசம் : இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுவோம் - மீனவ சங்கங்கள் எச்சரிக்கை samugammedia வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி அதிகரித்துள்ள நிலையில் விரைவில் யாழ்ப்பாணம் இந்தியத் தூதரத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சமாசத் தலைவர் செல்லத்துரை நற்குணம் எச்சரிக்கை விடுத்தார்.இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த ஆறாம் திகதி யாழ்ப்பாண மாவட்ட கடற் பரப்புகளில் அத்துமீறி வருகை தரும் இந்தியா ரோலர் படகுகளினால் எமது மீனவர்களின் சுமார் 60 இலட்சத்துக்கு அதிகமான மீன்பிடி வலைகள் அறுத்து நாசம் செய்துள்ளது .இந்தியா இல்லை தாண்டி மீனவர்களினால் பல வருட காலமாக எமது மீனவ மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் கடற்த்தொழில் உபகரணங்களையும் இழந்துள்ள நிலையில் எவ்விதமான இழப்பீடுகளும் கிடைக்கப் பெறவில்லை.அண்மையில் கூட அத்து மீறிய இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கிப் போராட்டம் நடத்தியதோடு இலங்கை ஜனாதிபதி கடற் தொழில் அமைச்சர் மற்றும் இந்தியா பிரதமருக்கு அனுப்புமாறு எமது கோரிக்கை மஜகரை அரசாங்க அதிபரிடம் கையளித்தோம்.ஆனால் எமது கோரிக்கைக்கு எவ் விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது கடந்த ஆறாம் திகதி இந்திய மீனவர்களினால் எமது மீனவர்களின் வலைகள் அறுத்து நாசம் செய்ததோடு மீன்களும் எள்ளிச் செல்லப்பட்டுள்ளது.இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையால் யாழ் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம் எவ்விதமான கரிசனையும் கொள்ளவில்லை.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பல மீனவக் குடும்பங்கள் வாழ வழி இன்றி காணப்படும் நிலையில் எமது தொப்புக் கொடி உறவுகள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையே அழித்து வருகின்றனர்.ஆகவே இந்திய எல்லை தாண்டிய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதோடு தொடர்ந்து இந்திய மீனவர்களின் வருகை அதிகரிக்குமானால் யாழில் உள்ள இந்தியத் துனைத் தூதரகத்தை முடக்கிப் போராட்டம் நடத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார் .குறித்த ஊடக சந்திப்பில் கடற் தொழிலாளர் கிராமிய அமைப்பின் உப தலைவர் அந்தோணி பிள்ளை மரியதாஸ் மற்றும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன பொருளாளரும் வலி வடக்கு கடற்தொழிலாளர் கிராமிய அமைப்பின் உப தலைவருமான மகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement