• Nov 14 2024

மட்டக்களப்பில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு..!

Sharmi / Sep 20th 2024, 12:33 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல்களை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நாளையதினம்(21) காலை 7.00 மணி தொடக்கம் 4.00 மணி வரையில் தேர்தல் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வாக்காளர்கள் உரிய நேரத்திற்கு சென்று வாக்களிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் 09 வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியடைந்துள்ளன. 

மாவட்டத்தில் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 686பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

அவர்களில் 13,116 பேர் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றவர்களாவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டள்ளதுடன் அவற்றில் 81 வலயங்களுக்கு பொறுப்பாக உதவி தெரிவித்தாட்சி அலுவலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தேர்தல் கடமைகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 6,750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.பாதுகாப்பு பணியில் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

அதேவேளை, இன்றைய தினம் வாக்குப் பெட்டிகள் சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களினால் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல்களை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அதேவேளை, நாளையதினம்(21) காலை 7.00 மணி தொடக்கம் 4.00 மணி வரையில் தேர்தல் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வாக்காளர்கள் உரிய நேரத்திற்கு சென்று வாக்களிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையின் 09 வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியடைந்துள்ளன. மாவட்டத்தில் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 686பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.அவர்களில் 13,116 பேர் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றவர்களாவர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டள்ளதுடன் அவற்றில் 81 வலயங்களுக்கு பொறுப்பாக உதவி தெரிவித்தாட்சி அலுவலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.தேர்தல் கடமைகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 6,750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.பாதுகாப்பு பணியில் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.அதேவேளை, இன்றைய தினம் வாக்குப் பெட்டிகள் சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களினால் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement