• Jul 26 2025

செம்மணியில் இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு

Chithra / Jul 25th 2025, 10:48 am
image

 

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வு பணிகள் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

ஏற்கனவே ஆழ்ந்தெடுக்கப்பட்ட 67 மனித எலும்பு கூடுகளுடன் புதன்கிழமை (23) பிற்பகலில் இருந்து வியாழக் கிழமை வரை 9 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 76 மனித எலும்புக்கூடுகள்  அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

நேற்று வியாழக் கிழமை  புதிதாக மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 88 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.என்றார்.

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 20 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன.  

செம்மணியில் இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு  செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அகழ்வு பணிகள் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.ஏற்கனவே ஆழ்ந்தெடுக்கப்பட்ட 67 மனித எலும்பு கூடுகளுடன் புதன்கிழமை (23) பிற்பகலில் இருந்து வியாழக் கிழமை வரை 9 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 76 மனித எலும்புக்கூடுகள்  அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது.நேற்று வியாழக் கிழமை  புதிதாக மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 88 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.என்றார்.செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 20 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன.  

Advertisement

Advertisement

Advertisement