• Feb 27 2025

இந்தோனேஷியாவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

Tharmini / Feb 26th 2025, 10:15 am
image

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரையில் இன்று (26) அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (USGS) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக உடனடி சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. USGS தரவுகளின்படி, அந் நாட்டு நேரப்படி காலை 6:55 மணிக்கு (22.55 GMT) 10 கிலோ மீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் மையப்பகுதி வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் உள்ளது. இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையம் 6.0 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் உறுதிபடுத்தியது.

பசுபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, டெக்டோனிக் தகடுகள் அசைவுகளால் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு முகங்கொடுக்கின்றது. சுலவேசி பகுதியில் கடந்த காலங்களில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

2021 ஜனவரியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 100 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். 2018 ஆம் ஆண்டில், பாலுவில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி காரணமாக 2,200 க்கும் அதிகமானோர் இறந்தனர்.

இந்தோனேசியாவின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கம் 2004 ஆம் ஆண்டில் ரிக்டர் 9.1 அளவில் பதிவான பேரழிவு ஆகும். இது சுனாமியைத் தூண்டி 170,000 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்றது.

இந்தோனேஷியாவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரையில் இன்று (26) அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (USGS) தெரிவித்துள்ளது.நிலநடுக்கம் காரணமாக உடனடி சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. USGS தரவுகளின்படி, அந் நாட்டு நேரப்படி காலை 6:55 மணிக்கு (22.55 GMT) 10 கிலோ மீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதன் மையப்பகுதி வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் உள்ளது. இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையம் 6.0 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் உறுதிபடுத்தியது.பசுபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, டெக்டோனிக் தகடுகள் அசைவுகளால் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு முகங்கொடுக்கின்றது. சுலவேசி பகுதியில் கடந்த காலங்களில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.2021 ஜனவரியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 100 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். 2018 ஆம் ஆண்டில், பாலுவில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி காரணமாக 2,200 க்கும் அதிகமானோர் இறந்தனர்.இந்தோனேசியாவின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கம் 2004 ஆம் ஆண்டில் ரிக்டர் 9.1 அளவில் பதிவான பேரழிவு ஆகும். இது சுனாமியைத் தூண்டி 170,000 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்றது.

Advertisement

Advertisement

Advertisement