கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கல்லாறு பகுதியில்
6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
தர்மபுரம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில்
கல்லாறு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 11:45 மணியளவில் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் பொலிஸார் மீட்டனர். அந்த உரப்பையைச் சோதனையிட்டபோது, அதில் 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தப்பிச் சென்ற நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கல்லாறு பகுதியில் 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. தர்மபுரம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் கல்லாறு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 11:45 மணியளவில் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் பொலிஸார் மீட்டனர். அந்த உரப்பையைச் சோதனையிட்டபோது, அதில் 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும் சம்பவ இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தப்பிச் சென்ற நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.