• May 03 2024

வரதட்சணை கொடுமையால் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / May 1st 2023, 7:00 pm
image

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள விலாப்பட்டி மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி விஜயா தம்பதியினர். இவர்களது மகன் அரவிந்தன்(25). இவர் சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் மாஸ்டராக உள்ள நிலையில் இவருக்கும் சவேரியார் பட்டினத்தைச் சேர்ந்த குமரன் என்பவரது மகள் நாகேஸ்வரிக்கும் (22) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது.

இந்நிலையில் நாகேஸ்வரி ஏழு மாத கர்ப்பமாக உள்ள நிலையில் திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே நாகேஸ்வரியின் கணவர் அரவிந்தன் மாமியார் விஜயா மாமனார் தங்கமணி அதே போல் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்த அரவிந்தனின் மாமாவான செல்வராஜ் ஆகியோர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 15 சவரன் நகை வரதட்சணையாக கொடுத்து நாகேஸ்வரியை திருமணம் செய்து வைத்த நிலையில் மேலும் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் கடந்த எட்டு மாதங்களில் இரண்டு மூன்று முறை கணவனோடு‌ சண்டை போட்டுக் கொண்டு நாகேஸ்வரி தாயார் வீட்டிற்கு வருவதும் பின்னர் கணவனே சமரசம் செய்து நாகேஸ்வரியை அழைத்து செல்வதுமாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நாகேஸ்வரி கணவன் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக நாகேஸ்வரியின் கணவன் அரவிந்தன் நாகேஸ்வரியின் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் நாகேஸ்வரியை கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த நாகேஸ்வரியின் உறவினர்கள் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது நாகேஸ்வரி உயிரிழந்து விட்டதாக கூறி அவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை அடுத்து நாகேஸ்வரியின் உறவினர்கள் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அன்னவாசல் காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து வழக்கை விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்ட நாகேஸ்வரியின் உடலையும் அதேபோல் நாகேஸ்வரியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 7 மாத ஆண் சிசுவின் உடலையும் வாங்க மறுத்த உறவினர்கள் நாகேஸ்வரியின் உயிரிழப்பிற்கு காரணமாக உள்ள நாகேஸ்வரியின் கணவர் மாமனார் மாமியார் கணவரின் மாமா உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்வோம் என்று உறுதியளித்தனர். இதற்கிடையில் நாகேஸ்வரியின் உறவினர்கள் கீரனூர் அருகே குளத்தூர் பிரிவு சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் அவர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து நாகேஸ்வரியின் உடலையும் அவர் வயிற்றில் இருந்த ஏழு மாத ஆண் சிசுவையும் பெற்ற அவரது உறவினர்கள் நேராக விலாப்பட்டி மேட்டுக்களம் பகுதியில் உள்ள நாகேஸ்வரியின் கணவரான அரவிந்தன் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அரவிந்தன் மற்றும் அவரது பெற்றோர் மாமா ஆகிய நான்கு பேரும் தலைமறைவான நிலையில் அதிர்ச்சி அடைந்த நாகேஸ்வரியின் உறவினர்கள் அரவிந்தன் வீட்டு முன்பே குழி தோண்டி நாகேஸ்வரியின் உடலையும் அவர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 7 மாத ஆண் சிசுவையும் புதைக்க முற்பட்டனர்.

ஆனால் காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டு குழி தோண்டி புதைப்பதை தடுத்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நூற்றுக்கும் மேற்பட்ட நாகேஸ்வரியின் உறவினர்கள் காவல்துறையினரையும் மீறி நாகேஸ்வரிக்கும் அவரது வயிற்றில் இருந்த எடுக்கப்பட்ட அவரது குழந்தையான 7 மாத ஆண் சிசுவிற்கும் இறுதி சடங்கு செய்து காவல்துறையினர் முன்னிலையில் நாகேஸ்வரியின் கணவன் அரவிந்தன் வீட்டு முன்பு புதைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாகேஸ்வரியின் உடலையும் அவரது வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 7 மாத சிசுவையும் பார்த்து நாகேஸ்வரியின் உறவினர்கள் மட்டுமல்லாமல் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் கண்ணீர் வடித்தது காண்போரின் நெஞ்சத்தை பதறச் செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் சந்தேக மரணம் என்று அன்னவாசல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் திருமணம் ஆகி 7 ஆண்டுகளில் பெண் மரணம் அடைந்தால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடப்பது இயல்பு என்பதால் நாகேஸ்வரி உயிரிழப்பு சம்பவத்தில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ள நிலையில் தற்பொழுது நாகேஸ்வரியின் கணவன் அரவிந்தனை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விலாப்பட்டி மேட்டுக்களம் பகுதி மட்டுமல்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

வரதட்சணை கொடுமையால் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு samugammedia புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள விலாப்பட்டி மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி விஜயா தம்பதியினர். இவர்களது மகன் அரவிந்தன்(25). இவர் சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் மாஸ்டராக உள்ள நிலையில் இவருக்கும் சவேரியார் பட்டினத்தைச் சேர்ந்த குமரன் என்பவரது மகள் நாகேஸ்வரிக்கும் (22) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது.இந்நிலையில் நாகேஸ்வரி ஏழு மாத கர்ப்பமாக உள்ள நிலையில் திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே நாகேஸ்வரியின் கணவர் அரவிந்தன் மாமியார் விஜயா மாமனார் தங்கமணி அதே போல் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்த அரவிந்தனின் மாமாவான செல்வராஜ் ஆகியோர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.ஏற்கனவே 15 சவரன் நகை வரதட்சணையாக கொடுத்து நாகேஸ்வரியை திருமணம் செய்து வைத்த நிலையில் மேலும் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் கடந்த எட்டு மாதங்களில் இரண்டு மூன்று முறை கணவனோடு‌ சண்டை போட்டுக் கொண்டு நாகேஸ்வரி தாயார் வீட்டிற்கு வருவதும் பின்னர் கணவனே சமரசம் செய்து நாகேஸ்வரியை அழைத்து செல்வதுமாக இருந்து வந்துள்ளது.இந்நிலையில் நேற்று நாகேஸ்வரி கணவன் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக நாகேஸ்வரியின் கணவன் அரவிந்தன் நாகேஸ்வரியின் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் நாகேஸ்வரியை கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த நாகேஸ்வரியின் உறவினர்கள் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது நாகேஸ்வரி உயிரிழந்து விட்டதாக கூறி அவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.இதனை அடுத்து நாகேஸ்வரியின் உறவினர்கள் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அன்னவாசல் காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து வழக்கை விசாரணை செய்து வந்தனர்.இந்நிலையில் இன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்ட நாகேஸ்வரியின் உடலையும் அதேபோல் நாகேஸ்வரியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 7 மாத ஆண் சிசுவின் உடலையும் வாங்க மறுத்த உறவினர்கள் நாகேஸ்வரியின் உயிரிழப்பிற்கு காரணமாக உள்ள நாகேஸ்வரியின் கணவர் மாமனார் மாமியார் கணவரின் மாமா உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்வோம் என்று உறுதியளித்தனர். இதற்கிடையில் நாகேஸ்வரியின் உறவினர்கள் கீரனூர் அருகே குளத்தூர் பிரிவு சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.பின்னர் போலீசார் அவர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து நாகேஸ்வரியின் உடலையும் அவர் வயிற்றில் இருந்த ஏழு மாத ஆண் சிசுவையும் பெற்ற அவரது உறவினர்கள் நேராக விலாப்பட்டி மேட்டுக்களம் பகுதியில் உள்ள நாகேஸ்வரியின் கணவரான அரவிந்தன் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அரவிந்தன் மற்றும் அவரது பெற்றோர் மாமா ஆகிய நான்கு பேரும் தலைமறைவான நிலையில் அதிர்ச்சி அடைந்த நாகேஸ்வரியின் உறவினர்கள் அரவிந்தன் வீட்டு முன்பே குழி தோண்டி நாகேஸ்வரியின் உடலையும் அவர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 7 மாத ஆண் சிசுவையும் புதைக்க முற்பட்டனர்.ஆனால் காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டு குழி தோண்டி புதைப்பதை தடுத்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நூற்றுக்கும் மேற்பட்ட நாகேஸ்வரியின் உறவினர்கள் காவல்துறையினரையும் மீறி நாகேஸ்வரிக்கும் அவரது வயிற்றில் இருந்த எடுக்கப்பட்ட அவரது குழந்தையான 7 மாத ஆண் சிசுவிற்கும் இறுதி சடங்கு செய்து காவல்துறையினர் முன்னிலையில் நாகேஸ்வரியின் கணவன் அரவிந்தன் வீட்டு முன்பு புதைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாகேஸ்வரியின் உடலையும் அவரது வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 7 மாத சிசுவையும் பார்த்து நாகேஸ்வரியின் உறவினர்கள் மட்டுமல்லாமல் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் கண்ணீர் வடித்தது காண்போரின் நெஞ்சத்தை பதறச் செய்தது.இந்நிலையில் இந்த வழக்கில் சந்தேக மரணம் என்று அன்னவாசல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் திருமணம் ஆகி 7 ஆண்டுகளில் பெண் மரணம் அடைந்தால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடப்பது இயல்பு என்பதால் நாகேஸ்வரி உயிரிழப்பு சம்பவத்தில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ள நிலையில் தற்பொழுது நாகேஸ்வரியின் கணவன் அரவிந்தனை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விலாப்பட்டி மேட்டுக்களம் பகுதி மட்டுமல்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement