• Aug 02 2025

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

Chithra / Aug 1st 2025, 2:52 pm
image


ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற அங்காடிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பல சந்தர்ப்பங்களில் அவர்கள் இவ்வாறு மதுபான போத்தல்களை எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அந்த அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராகச் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற அங்காடிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் இவ்வாறு மதுபான போத்தல்களை எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராகச் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement