• Sep 20 2024

73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி - சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல் samugammedia

Chithra / Aug 14th 2023, 9:55 pm
image

Advertisement

இந்த வருடத்தில் இதுவரை மொத்தமாக 73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது.

தர பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ள மருந்துகளில் 45 வகையான மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 17 மருந்து வகைகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் ஏனையவை பாகிஸ்தான், ஜப்பான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட தர பரிசோதனையில் உரிய தரத்தை கொண்டிராத மருந்துகளில், சில மீள பெறப்பட்டன. அதேபோல சில மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மொத்தமாக 585 தரம் குறைந்த மருந்துகள் இனம்காணப்பட்டன.

கடந்த 2019ஆம் ஆண்டில் 96 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டில் 86 மருந்து வகைகள் தரக்குறைபாடுகளை கொண்டிருந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி - சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல் samugammedia இந்த வருடத்தில் இதுவரை மொத்தமாக 73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது.தர பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ள மருந்துகளில் 45 வகையான மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று 17 மருந்து வகைகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் ஏனையவை பாகிஸ்தான், ஜப்பான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.மேற்கொள்ளப்பட்ட தர பரிசோதனையில் உரிய தரத்தை கொண்டிராத மருந்துகளில், சில மீள பெறப்பட்டன. அதேபோல சில மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.இந்தநிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மொத்தமாக 585 தரம் குறைந்த மருந்துகள் இனம்காணப்பட்டன.கடந்த 2019ஆம் ஆண்டில் 96 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டில் 86 மருந்து வகைகள் தரக்குறைபாடுகளை கொண்டிருந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement