• May 02 2024

முன்னாள் ஜனாதிபதிகள், முதல் பெண்மணியின் பராமரிப்புக்காக 84 மில்லியன் ஒதுக்கீடு?

Chithra / Feb 2nd 2023, 1:37 pm
image

Advertisement

இந்த ஆண்டு நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணியின் பராமரிப்புக்காக அரசாங்கம் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தத் தொகை 844 இலட்சம் ரூபாய் அல்லது 84 மில்லியனுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு அதிகூடிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரில் ஒவ்வொருவருக்கும் தலா 23 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு 15 மில்லியன் ரூபாயும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாசவுக்கு 08 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகள், முதல் பெண்மணியின் பராமரிப்புக்காக 84 மில்லியன் ஒதுக்கீடு இந்த ஆண்டு நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணியின் பராமரிப்புக்காக அரசாங்கம் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்தத் தொகை 844 இலட்சம் ரூபாய் அல்லது 84 மில்லியனுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு அதிகூடிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.குறித்த இருவரில் ஒவ்வொருவருக்கும் தலா 23 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு 15 மில்லியன் ரூபாயும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாசவுக்கு 08 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement