• Feb 20 2025

அமெரிக்காவில் பெய்த கன மழையால் 9 பேர் உயிரிழப்பு!

Tharmini / Feb 17th 2025, 1:27 pm
image

தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியதால், வார இறுதியில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தனது மாநிலத்தில் எட்டு பேர் இறந்துவிட்டதாகக் ஞாயிற்றுக்கிழமை கூறியதுடன், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்தார். வெள்ள நீரில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்கள், பலர் தங்கள் வாகனங்களில் சிக்கிக் கொண்டனர்.

கென்டக்கி, ஜார்ஜியா, அலபாமா, மிசிசிப்பி, டென்னசி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா மற்றும் வட கரோலினா ஆகியவை இந்த வார இறுதியில் புயல் தொடர்பான எச்சரிக்கையில் உள்ளன.

ஏறக்குறைய அந்த மாநிலங்கள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் ஹெலீன் சூறாவளியால் பேரழிவைச் சந்தித்தன.

இதனிடையே, எட்டு மாநிலங்களைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சாரம் இல்லாமல் இருந்தன என்று poweroutage.us தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பெய்த கன மழையால் 9 பேர் உயிரிழப்பு தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியதால், வார இறுதியில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்.கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தனது மாநிலத்தில் எட்டு பேர் இறந்துவிட்டதாகக் ஞாயிற்றுக்கிழமை கூறியதுடன், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்தார். வெள்ள நீரில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்கள், பலர் தங்கள் வாகனங்களில் சிக்கிக் கொண்டனர்.கென்டக்கி, ஜார்ஜியா, அலபாமா, மிசிசிப்பி, டென்னசி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா மற்றும் வட கரோலினா ஆகியவை இந்த வார இறுதியில் புயல் தொடர்பான எச்சரிக்கையில் உள்ளன.ஏறக்குறைய அந்த மாநிலங்கள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் ஹெலீன் சூறாவளியால் பேரழிவைச் சந்தித்தன.இதனிடையே, எட்டு மாநிலங்களைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சாரம் இல்லாமல் இருந்தன என்று poweroutage.us தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement