சிறிலங்கன் ஏர்லைன்ஸின் நீண்டகால கடன்களைத் தீர்ப்பதற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகள் ஜப்பான் உதவியுடன் நடைபெற்று வருகின்றன என்றும் அநுர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாத் துறைக்காக டிஜிட்டல் டிக்கெட் முறை ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நீண்டகால கடன்களைத் தீர்ப்பதற்கான திட்டம் தயாரிப்பு - ஜனாதிபதி சிறிலங்கன் ஏர்லைன்ஸின் நீண்டகால கடன்களைத் தீர்ப்பதற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகள் ஜப்பான் உதவியுடன் நடைபெற்று வருகின்றன என்றும் அநுர சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாத் துறைக்காக டிஜிட்டல் டிக்கெட் முறை ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்