• May 02 2024

விடுமுறையை கொண்டாட சொந்த வீட்டிற்கு வந்தபோது பெரும் சோகம் - 9 வயது சிறுவன் பரிதாப மரணம்..!

Chithra / Apr 16th 2024, 8:22 am
image

Advertisement

 கம்பளை - அம்பகமுவ வீதியில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் பெற்றோர் விடுமுறைக்கு கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களின் வீட்டிற்கு வந்திருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தாய் கடைக்கு சென்றுள்ளார். 

தாய் வீடு திரும்பி வந்து பார்த்தபோது சிறுவன் வீட்டில் இல்லாததால், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து சிறுவனை தேடியுள்ளனர்.

பிரதேசவாசிகள் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் இறங்கி தேடிய போது கிணற்றில் தவறி விழுந்து மூழ்கியிருந்த சிறுவனை மீட்டுள்ளனர்.

சிறுவனை உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் இதற்கு முன்னரும் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விடுமுறையை கொண்டாட சொந்த வீட்டிற்கு வந்தபோது பெரும் சோகம் - 9 வயது சிறுவன் பரிதாப மரணம்.  கம்பளை - அம்பகமுவ வீதியில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிறுவனின் பெற்றோர் விடுமுறைக்கு கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களின் வீட்டிற்கு வந்திருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தாய் கடைக்கு சென்றுள்ளார். தாய் வீடு திரும்பி வந்து பார்த்தபோது சிறுவன் வீட்டில் இல்லாததால், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து சிறுவனை தேடியுள்ளனர்.பிரதேசவாசிகள் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் இறங்கி தேடிய போது கிணற்றில் தவறி விழுந்து மூழ்கியிருந்த சிறுவனை மீட்டுள்ளனர்.சிறுவனை உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் இதற்கு முன்னரும் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement