• Jan 23 2025

காஸாவுக்குள் அத்தியாவசிய பொருட்களுடன் நுழைந்த 900 லொறிகள் !

Tharmini / Jan 22nd 2025, 10:45 am
image

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், காஸாவில் நிவாரண பொருட்கள் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பின் உதவி செய்யும் குழுக்கள், அரசு மற்றும் தனியார் துறைகள் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் காசாவுக்கு லொரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன.

நிவாரணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் செல்லும் லொரிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகளவிலும், கொள்ளை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆங்காங்கே சிறிய திருட்டுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.

இஸ்ரேல் – காசா இடையிலான போர் நிறுத்தத்தின் மூன்றாம் நாளில் கிட்டத்தட்ட 900 லொரிகளில் உதவி பொருட்கள் காசாவிற்குள் சென்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது ஒப்பந்தத்தில் கோரப்பட்ட 600 லொரிகளை விட கணிசமாக அதிகம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

காஸாவுக்குள் அத்தியாவசிய பொருட்களுடன் நுழைந்த 900 லொறிகள் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், காஸாவில் நிவாரண பொருட்கள் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பின் உதவி செய்யும் குழுக்கள், அரசு மற்றும் தனியார் துறைகள் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் காசாவுக்கு லொரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன.நிவாரணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் செல்லும் லொரிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகளவிலும், கொள்ளை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆங்காங்கே சிறிய திருட்டுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.இஸ்ரேல் – காசா இடையிலான போர் நிறுத்தத்தின் மூன்றாம் நாளில் கிட்டத்தட்ட 900 லொரிகளில் உதவி பொருட்கள் காசாவிற்குள் சென்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது ஒப்பந்தத்தில் கோரப்பட்ட 600 லொரிகளை விட கணிசமாக அதிகம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement