வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி 92 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியைப் பொலிஸார் நாடியுள்ளனர்.
ரெயின்போ கார்மென்ட்ஸ் டெக்னாலஜிஸ் (பிரைவேட்) லிமிடெட் என்ற தனியார் நிறுவனம், நாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று, நம்பிக்கையைத் தகர்த்து, அவர்களைத் தவறாகப் பயன்படுத்தி பண மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில், நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது.
நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 750 பேரிடம் இருந்து 92 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
அதன்படி, இது தொடர்பாக நுவகொட நீதவான் நீதிமன்றத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, இந்த மோசடி தொடர்பாக அதே நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றிய சந்தேக நபருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது அப்பகுதியிலிருந்து தப்பியோடியுள்ள சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக 92 கோடி ரூபா மோசடி - சந்தேகநபரான பெண்ணுக்கு வலைவீச்சு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி 92 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியைப் பொலிஸார் நாடியுள்ளனர். ரெயின்போ கார்மென்ட்ஸ் டெக்னாலஜிஸ் (பிரைவேட்) லிமிடெட் என்ற தனியார் நிறுவனம், நாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று, நம்பிக்கையைத் தகர்த்து, அவர்களைத் தவறாகப் பயன்படுத்தி பண மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில், நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது.நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 750 பேரிடம் இருந்து 92 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.அதன்படி, இது தொடர்பாக நுவகொட நீதவான் நீதிமன்றத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, இந்த மோசடி தொடர்பாக அதே நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றிய சந்தேக நபருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியிலிருந்து தப்பியோடியுள்ள சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.