• Nov 26 2024

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 94 பேர் பலி!

Tamil nila / Oct 16th 2024, 7:54 pm
image

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜிகாவா மாநிலத்தில் எரிபொருள் டேங்கர் ஒன்று விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதில் குறைந்தது 94 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜிகாவா மாநிலத்தில் உள்ள மஜியா என்ற கிராமத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை மாலை நடந்த இந்த குண்டுவெடிப்பால் பலி எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் கவிழ்ந்து எரிபொருளை வடிகால் பள்ளத்தில் கொட்டியது” என்று ஜிகாவா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஷிசு லாவன் ஆடம் கூறினார்.

சரக்கு ரெயில் போக்குவரத்து நைஜீரியாவில் மிகப்பெரிய தோல்வியடைந்ததால், சாலைமார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 94 பேர் பலி நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜிகாவா மாநிலத்தில் எரிபொருள் டேங்கர் ஒன்று விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதில் குறைந்தது 94 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.ஜிகாவா மாநிலத்தில் உள்ள மஜியா என்ற கிராமத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை மாலை நடந்த இந்த குண்டுவெடிப்பால் பலி எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.“டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் கவிழ்ந்து எரிபொருளை வடிகால் பள்ளத்தில் கொட்டியது” என்று ஜிகாவா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஷிசு லாவன் ஆடம் கூறினார்.சரக்கு ரெயில் போக்குவரத்து நைஜீரியாவில் மிகப்பெரிய தோல்வியடைந்ததால், சாலைமார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement