• Nov 17 2024

திடீரென உயிரிழந்த 14 வயது பாடசாலை மாணவி; பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Chithra / Jul 24th 2024, 8:16 am
image

 

காய்ச்சல் காரணமாக  கேகாலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

தெவலேகம பமுனுகம மலியதேவ மகா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஹஷினி மதுபாஷினி விக்கிரமாராச்சி என்ற 14 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அண்மையில் காய்ச்சல் காரணமாக கேகாலை பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 10ஆம் திகதி வயிற்றின் இரு பக்கங்களிலும், கை, கால்களிலும் வலி ஏற்பட்டதால் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பாடசாலை மாணவியின் பிரேத பரிசோதனையை கேகாலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி நிரஞ்சலா குலதுங்க மேற்கொண்டுள்ளார்.

மாணவியின் இதயம் மற்றும் சிறுநீரகங்களில் ஒரு வகை விசக்கிருமி நுழைந்துள்ளமையே மாணவியின் மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பாடசாலை மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று இம்புல்கஸ்தெனியில் இடம்பெறவுள்ளது.

திடீரென உயிரிழந்த 14 வயது பாடசாலை மாணவி; பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்  காய்ச்சல் காரணமாக  கேகாலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.தெவலேகம பமுனுகம மலியதேவ மகா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஹஷினி மதுபாஷினி விக்கிரமாராச்சி என்ற 14 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அண்மையில் காய்ச்சல் காரணமாக கேகாலை பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.இதனையடுத்து கடந்த 10ஆம் திகதி வயிற்றின் இரு பக்கங்களிலும், கை, கால்களிலும் வலி ஏற்பட்டதால் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பாடசாலை மாணவியின் பிரேத பரிசோதனையை கேகாலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி நிரஞ்சலா குலதுங்க மேற்கொண்டுள்ளார்.மாணவியின் இதயம் மற்றும் சிறுநீரகங்களில் ஒரு வகை விசக்கிருமி நுழைந்துள்ளமையே மாணவியின் மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.இவ்வாறு உயிரிழந்த பாடசாலை மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று இம்புல்கஸ்தெனியில் இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement