• Jul 12 2025

மன்னாரில் கோர விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன் பலி! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்

Chithra / Jul 11th 2025, 7:53 am
image

மன்னார் - நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்,

நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து நானாட்டான் நோக்கி, தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது,

நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும், பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். 

மேலும், தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னாரில் கோர விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன் பலி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் மன்னார் - நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்,நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து நானாட்டான் நோக்கி, தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது,நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மேலும், தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement