• May 20 2024

கர்ப்பப்பைக்கு வெளியே நஞ்சுக்கொடியில் வளர்ந்த குழந்தை..! இலங்கை வைத்தியர்கள் சாதனை! samugammedia

Chithra / Jun 17th 2023, 6:10 am
image

Advertisement

கருப்பைக்கு வெளியில் உள்ள நஞ்சுக்கொடியில் உருவான குழந்தையொன்றினை இளம் தாயொருவர் நேற்று கொழும்பு சொய்சா வைத்தியசாலையில் வெற்றிகரமாக சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

கிண்ணியா பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய தாயொருவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதுடன், தாயும், குழந்தையும் வைத்திய கண்காணிப்பில் நலமாக உள்ளதாகசொய்சா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் மொஹமட் ரிஷாத் தெரிவித்துள்ளார்.

இது அரிதான பிரசவம் என்பதால் திருகோணமலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு சொய்சா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.


இதன்போது 28 வாரங்களேயான கருவுடன், தாய் சொய்சா வைத்தியசாலையில் 34 வாரங்கள் கடுமையான வைத்திய கண்காணிப்பில் தங்கியிருந்த நிலையில் பிரசவம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 30,000 கர்ப்பிணித் தாய்மார்களில் ஒருவருக்கு இதுபோன்ற அரிதான கரு நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறிய வைத்தியர்கள் பிரசவத்தின்போது தாய்க்கும், குழந்தைக்கும் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்று குறிப்பிடுகின்றனர்.

விசேட சத்திரசிகிச்சை நிபுணர் பேராசிரியர் இஷான் டி சொய்சா, மயக்க மருந்து நிபுணர் டொக்டர் ஹர்ஷனி லியனகே, விசேட வைத்தியர் கனிஷ்க கருணாரத்ன, மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் மொஹமட் ரிஷாத் உள்ளிட்ட வைத்தியர்கள் உட்பட சுமார் முப்பது பேர் கொண்ட குழுவே இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

கர்ப்பப்பைக்கு வெளியே நஞ்சுக்கொடியில் வளர்ந்த குழந்தை. இலங்கை வைத்தியர்கள் சாதனை samugammedia கருப்பைக்கு வெளியில் உள்ள நஞ்சுக்கொடியில் உருவான குழந்தையொன்றினை இளம் தாயொருவர் நேற்று கொழும்பு சொய்சா வைத்தியசாலையில் வெற்றிகரமாக சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.கிண்ணியா பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய தாயொருவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதுடன், தாயும், குழந்தையும் வைத்திய கண்காணிப்பில் நலமாக உள்ளதாகசொய்சா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் மொஹமட் ரிஷாத் தெரிவித்துள்ளார்.இது அரிதான பிரசவம் என்பதால் திருகோணமலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு சொய்சா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.இதன்போது 28 வாரங்களேயான கருவுடன், தாய் சொய்சா வைத்தியசாலையில் 34 வாரங்கள் கடுமையான வைத்திய கண்காணிப்பில் தங்கியிருந்த நிலையில் பிரசவம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.சுமார் 30,000 கர்ப்பிணித் தாய்மார்களில் ஒருவருக்கு இதுபோன்ற அரிதான கரு நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறிய வைத்தியர்கள் பிரசவத்தின்போது தாய்க்கும், குழந்தைக்கும் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்று குறிப்பிடுகின்றனர்.விசேட சத்திரசிகிச்சை நிபுணர் பேராசிரியர் இஷான் டி சொய்சா, மயக்க மருந்து நிபுணர் டொக்டர் ஹர்ஷனி லியனகே, விசேட வைத்தியர் கனிஷ்க கருணாரத்ன, மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் மொஹமட் ரிஷாத் உள்ளிட்ட வைத்தியர்கள் உட்பட சுமார் முப்பது பேர் கொண்ட குழுவே இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement