• May 09 2024

ஒரே நாளில் இரு பல்கலை மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு - சோகத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம்..! samugammedia

Chithra / Jun 17th 2023, 6:12 am
image

Advertisement

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவர்  நேற்று காலை பல்கலைக்கழகத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பேராதனைப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்க யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பீட மாணவர்கள் தங்கும் அக்பர் மண்டபத்தில் அவர் தங்கியிருந்த அறையின் கழிவறையில் அவரது சடலம் தூக்கில் தொங்குவதைப் பார்த்த மாணவர்கள், பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகமும் பேராதனை காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் உடல் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற நீதிபதி உடலை பார்வையிட்ட நிலையில் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் மாணவனின் மரணம் தொடர்பில் நுகே கொட காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமையை மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் இரு பிரபல பல்கலைகழகங்களில் ஒரே நாளில் உயிரை மாய்த்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஒரே நாளில் இரு பல்கலை மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு - சோகத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம். samugammedia பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவர்  நேற்று காலை பல்கலைக்கழகத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பேராதனைப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்க யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொறியியல் பீட மாணவர்கள் தங்கும் அக்பர் மண்டபத்தில் அவர் தங்கியிருந்த அறையின் கழிவறையில் அவரது சடலம் தூக்கில் தொங்குவதைப் பார்த்த மாணவர்கள், பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகமும் பேராதனை காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் உடல் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தது.யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவ இடத்துக்கு சென்ற நீதிபதி உடலை பார்வையிட்ட நிலையில் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் மாணவனின் மரணம் தொடர்பில் நுகே கொட காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமையை மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பிரேத பரிசோதனைக்காக சடலம் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் இரு பிரபல பல்கலைகழகங்களில் ஒரே நாளில் உயிரை மாய்த்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement