• Sep 20 2024

இரத்தினக்கல் வியாபார பணமோசடியில் சிக்கிய வர்த்தகர்! samugammedia

Chithra / Jul 5th 2023, 7:35 am
image

Advertisement

பேருவளை பிரதேசத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 10 நீல மாணிக்கற்களை பெற்று விலை மதிப்பற்ற காசோலைகளை வழங்கியதாக கூறப்படும் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர்கள் இருவரினால் முன்வைக்கப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை அடுத்து ஜா-அல, ஏகல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபரான வர்த்தகர் முறைப்பாட்டாளரான பேருவளை வர்த்தகரிடம் இருந்து 33 இலட்சத்து 13 ஆயிரம் ரூபா பெறுமதியான 09 நீல இரத்தினகற்களை பெற்று அதற்கான காசோலைகளை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேபோன்று, பேருவளை பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இரத்தினக்கல் வர்த்தகரிடம் இருந்து 13 இலட்சத்து 50,000 ரூபா பெறுமதியான நீலக்கல் ஒன்றும் பெறப்பட்டு அதற்கான காசோலைகளும் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்திற்குரிய வர்த்தகர் இரண்டு இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு வழங்கிய 8 காசோலைகளை அந்த வங்கியில் ஒப்படைத்ததன் பின்னர் அவை பெறுமதியற்ற காசோலைகள் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் இரத்தினக்கல் வர்த்தகர்கள் சந்தேக நபருக்கு அறிவித்தும் பணத்தை வழங்குவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படாததால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதற்கமைய சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், விசாரணைகளின் பின் களுத்துறை நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப் படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினக்கல் வியாபார பணமோசடியில் சிக்கிய வர்த்தகர் samugammedia பேருவளை பிரதேசத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 10 நீல மாணிக்கற்களை பெற்று விலை மதிப்பற்ற காசோலைகளை வழங்கியதாக கூறப்படும் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பேருவளை பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர்கள் இருவரினால் முன்வைக்கப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை அடுத்து ஜா-அல, ஏகல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபரான வர்த்தகர் முறைப்பாட்டாளரான பேருவளை வர்த்தகரிடம் இருந்து 33 இலட்சத்து 13 ஆயிரம் ரூபா பெறுமதியான 09 நீல இரத்தினகற்களை பெற்று அதற்கான காசோலைகளை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.அதேபோன்று, பேருவளை பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இரத்தினக்கல் வர்த்தகரிடம் இருந்து 13 இலட்சத்து 50,000 ரூபா பெறுமதியான நீலக்கல் ஒன்றும் பெறப்பட்டு அதற்கான காசோலைகளும் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேகத்திற்குரிய வர்த்தகர் இரண்டு இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு வழங்கிய 8 காசோலைகளை அந்த வங்கியில் ஒப்படைத்ததன் பின்னர் அவை பெறுமதியற்ற காசோலைகள் என தெரியவந்துள்ளது.இது தொடர்பில் இரத்தினக்கல் வர்த்தகர்கள் சந்தேக நபருக்கு அறிவித்தும் பணத்தை வழங்குவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படாததால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.இதற்கமைய சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், விசாரணைகளின் பின் களுத்துறை நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப் படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement