• Nov 22 2025

27 இல் அனைவரும் அணிதிரள அழைப்பு!

shanuja / Nov 22nd 2025, 6:53 pm
image

மாவீர செல்வங்களிற்கு மதிப்பளிக்கும் வகையில் எதிர்வரும் 27ம் திகதி வியாழக்கிழமை பூநகரி பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தையும் இடைநிறுத்தி நினைவேந்தலில் பங்கெடுக்க அனைவரிற்கும் பூநகரி பிரதேசசபை தவிசாளர் அழைப்பு விடுத்துள்ளார்.


அன்றைய தினம் பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட சந்தைகள் இயங்காதென தெரிவித்துள்ள தவிசாளர் கால்நடை கொல்களங்கள் மூடப்பட்டிருப்பதுடன் இறைச்சிக்கடைகளும் முடங்கியிருக்குமென விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


அதேவேளை அன்றைய தினம் மதுச்சாலைகள் மற்றும் தவறணைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களும் மூடி ஒத்துழைப்பு வழங்குவதுடன் பணியாளர்கள் துயிலுமில்லங்களிற்கு செல்ல ஒத்துழைப்பு வழங்க கோரியுள்ளார்.


குறிப்பாக களியாட்ட நிகழ்வுகள் அனைத்தையும் நிறுத்தி பொது மைதானங்களில் போட்டிநிகழ்வுகளை தவிர்க்கவும் அவர் கோரியுள்ளார்.


அத்துடன் முழங்காவில் மற்றும் வாடியடி நகரப்பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கவும் அழைப்புவிடுத்துள்ளார்.


இதனிடையே பூநகரியின் முழங்காவில் துயிலுமில்லம் இடித்தழிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கிலுள்ள துயிலுமில்லங்களில் முன்னுதாரணமாக மீள புனரமைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

27 இல் அனைவரும் அணிதிரள அழைப்பு மாவீர செல்வங்களிற்கு மதிப்பளிக்கும் வகையில் எதிர்வரும் 27ம் திகதி வியாழக்கிழமை பூநகரி பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தையும் இடைநிறுத்தி நினைவேந்தலில் பங்கெடுக்க அனைவரிற்கும் பூநகரி பிரதேசசபை தவிசாளர் அழைப்பு விடுத்துள்ளார்.அன்றைய தினம் பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட சந்தைகள் இயங்காதென தெரிவித்துள்ள தவிசாளர் கால்நடை கொல்களங்கள் மூடப்பட்டிருப்பதுடன் இறைச்சிக்கடைகளும் முடங்கியிருக்குமென விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.அதேவேளை அன்றைய தினம் மதுச்சாலைகள் மற்றும் தவறணைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களும் மூடி ஒத்துழைப்பு வழங்குவதுடன் பணியாளர்கள் துயிலுமில்லங்களிற்கு செல்ல ஒத்துழைப்பு வழங்க கோரியுள்ளார்.குறிப்பாக களியாட்ட நிகழ்வுகள் அனைத்தையும் நிறுத்தி பொது மைதானங்களில் போட்டிநிகழ்வுகளை தவிர்க்கவும் அவர் கோரியுள்ளார்.அத்துடன் முழங்காவில் மற்றும் வாடியடி நகரப்பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கவும் அழைப்புவிடுத்துள்ளார்.இதனிடையே பூநகரியின் முழங்காவில் துயிலுமில்லம் இடித்தழிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கிலுள்ள துயிலுமில்லங்களில் முன்னுதாரணமாக மீள புனரமைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement