• Nov 22 2024

புது வீடு வாங்கிய தம்பதியர்... வீட்டுக்குள் கண்ட சுவாரஸ்யம் - பொதுமக்கள் வியப்பு...!!

Tamil nila / Mar 1st 2024, 9:51 pm
image

புது வீடு ஒன்றை வாங்கிய தம்பதியர், வீட்டைப் புதுப்பிக்கும்போது சுவாரஸ்யமான விடயம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.

ஜானிஸ் சான்டினி (Janice Santini, 46) கிறிஸ்டோபர் (Christopher, 44) தம்பதியர், அமெரிக்காவின் Maine மாகாணத்தில் பழைய வீடு ஒன்றை வாங்கினார்கள். 

அதாவது வீட்டின் தரையில் பதிக்கப்பட்டிருந்த மரப்பலகைகளை அகற்றும்போது, ஒரு மரப்பலகையின் கீழ் ஆறு அடி ஆழமுள்ள கிணறு ஒன்றைக் கண்ட தம்பதியர் ஆச்சரியத்தில் திளைத்துள்ளார்கள்.

அந்த வீட்டின் வரலாறு குறித்து விசாரித்த தம்பதியர், அந்தக் கிணற்றின் வரலாற்றை பாதுகாப்பது என முடிவு செய்துள்ளார்கள்.

அந்தக் கிணற்றுக்கு, ’மன்னிப்பின் கிணறு’ என பெயரிட்டு, அதற்கு 270 கிலோ வரையிலான எடையைத் தாங்கக்கூடிய, 3,500 டொலர்கள் அதாவது சுமார் 2,700 பவுண்டுகள் விலையில், ஒரு கண்ணாடியாலான மூடியைச் செய்து மூடியுள்ளார்கள்.

மேலும் கிணற்றுக்குள் ஒரு நீல நிற விளக்கும் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அந்தக் கிணற்றைப் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் வரத்துவங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புது வீடு வாங்கிய தம்பதியர். வீட்டுக்குள் கண்ட சுவாரஸ்யம் - பொதுமக்கள் வியப்பு. புது வீடு ஒன்றை வாங்கிய தம்பதியர், வீட்டைப் புதுப்பிக்கும்போது சுவாரஸ்யமான விடயம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.ஜானிஸ் சான்டினி (Janice Santini, 46) கிறிஸ்டோபர் (Christopher, 44) தம்பதியர், அமெரிக்காவின் Maine மாகாணத்தில் பழைய வீடு ஒன்றை வாங்கினார்கள். அதாவது வீட்டின் தரையில் பதிக்கப்பட்டிருந்த மரப்பலகைகளை அகற்றும்போது, ஒரு மரப்பலகையின் கீழ் ஆறு அடி ஆழமுள்ள கிணறு ஒன்றைக் கண்ட தம்பதியர் ஆச்சரியத்தில் திளைத்துள்ளார்கள்.அந்த வீட்டின் வரலாறு குறித்து விசாரித்த தம்பதியர், அந்தக் கிணற்றின் வரலாற்றை பாதுகாப்பது என முடிவு செய்துள்ளார்கள்.அந்தக் கிணற்றுக்கு, ’மன்னிப்பின் கிணறு’ என பெயரிட்டு, அதற்கு 270 கிலோ வரையிலான எடையைத் தாங்கக்கூடிய, 3,500 டொலர்கள் அதாவது சுமார் 2,700 பவுண்டுகள் விலையில், ஒரு கண்ணாடியாலான மூடியைச் செய்து மூடியுள்ளார்கள்.மேலும் கிணற்றுக்குள் ஒரு நீல நிற விளக்கும் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அந்தக் கிணற்றைப் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் வரத்துவங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement