• Jan 26 2025

மன்னாரில் களைட்டிய பண்பாட்டியல் பொங்கல் விழா..!

Sharmi / Jan 20th 2025, 9:19 am
image

மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், தைத்திருநாள் பண்பாட்டியல் நிகழ்வு நேற்றையதினம்(19) மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மன்னார் தமிழ் சங்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற  குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபர் மை.கிறிஸ்ரியான் உட்பட அடம்பன் பங்கு தந்தை சீமான், சட்டத்தரணி சபுர்தீன், தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தைத்திருநாள் பொங்கல் விழா பண்பாட்டியல் நிகழ்வின் ஓர் அங்கமாக வரவேற்பு நடனம், கிராமிய நடனம், கவிதை,பேச்சு,குழுப்பாடல், நவீனம் குறியீட்டு நாடகம், கருத்துக்களம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் தமிழ் சங்கத்தினால் விருந்தினர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



மன்னாரில் களைட்டிய பண்பாட்டியல் பொங்கல் விழா. மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், தைத்திருநாள் பண்பாட்டியல் நிகழ்வு நேற்றையதினம்(19) மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.மன்னார் தமிழ் சங்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற  குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபர் மை.கிறிஸ்ரியான் உட்பட அடம்பன் பங்கு தந்தை சீமான், சட்டத்தரணி சபுர்தீன், தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தைத்திருநாள் பொங்கல் விழா பண்பாட்டியல் நிகழ்வின் ஓர் அங்கமாக வரவேற்பு நடனம், கிராமிய நடனம், கவிதை,பேச்சு,குழுப்பாடல், நவீனம் குறியீட்டு நாடகம், கருத்துக்களம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் தமிழ் சங்கத்தினால் விருந்தினர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement