• Sep 28 2024

ஜப்பானில் வேகமாகப் பரவும் கொடிய நோய்...! சுகாதார அமைச்சு தயார் நிலையில்...! சபையில் இராஜாங்க அமைச்சர் உறுதி...!

Sharmi / Jun 20th 2024, 12:02 pm
image

Advertisement

ஜப்பானில் பரவி வரும் அரிய பக்டீரியா தொற்று தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

ஜப்பானில்   ஒரு பக்ரீரியா துரிதமாக பரவி வருகின்றது எனவும், அதன் ஆபத்து இலங்கைக்கும் இருப்பதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது தொடர்பில் இலங்கையில் சுகாதார அமைச்சு தயார் நிலையில் உள்ளதாக என  பாராளுமன்ற உறுப்பினர்  சமன்பிரிய ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

ஜப்பானில் பரவி வரும் அரிய பக்டீரியா தொற்று  உலக நெருக்கடியாக  மாறும்  என்று உலக சுகாதார அமைப்பினால்  இன்னும் இனம் காணப்படவில்லை.

அத்துடன்  அந்த வைரஸ் கட்டுப்படுத்தக்கூடிய  ஒன்று என்பதால் அந்தந்தநாடுகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இலங்கையில் அது தொடர்பாக சுகாதார அமைச்சு கவனம் செலுத்துவதாகவும், விமான நிலையம் உள்ளிட்ட எல்லா நிறுவனகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் கொரோனா பெரும் தொற்று அளவுக்கு ஒரு உலகநெருக்கடியாக அந்த நாட்டில் கட்டுப்படுத்தக்கூடிய ஒருநிலைமையாக மாறும்.

அவ்வாறான நிலைமைகளில் சுகாதார பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட எல்லோரும் அதற்குத் தேவையான  நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல  பதிலளித்தார்.

ஜப்பானில் வேகமாகப் பரவும் கொடிய நோய். சுகாதார அமைச்சு தயார் நிலையில். சபையில் இராஜாங்க அமைச்சர் உறுதி. ஜப்பானில் பரவி வரும் அரிய பக்டீரியா தொற்று தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.ஜப்பானில்   ஒரு பக்ரீரியா துரிதமாக பரவி வருகின்றது எனவும், அதன் ஆபத்து இலங்கைக்கும் இருப்பதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது தொடர்பில் இலங்கையில் சுகாதார அமைச்சு தயார் நிலையில் உள்ளதாக என  பாராளுமன்ற உறுப்பினர்  சமன்பிரிய ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.ஜப்பானில் பரவி வரும் அரிய பக்டீரியா தொற்று  உலக நெருக்கடியாக  மாறும்  என்று உலக சுகாதார அமைப்பினால்  இன்னும் இனம் காணப்படவில்லை.அத்துடன்  அந்த வைரஸ் கட்டுப்படுத்தக்கூடிய  ஒன்று என்பதால் அந்தந்தநாடுகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.இலங்கையில் அது தொடர்பாக சுகாதார அமைச்சு கவனம் செலுத்துவதாகவும், விமான நிலையம் உள்ளிட்ட எல்லா நிறுவனகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.கடந்த காலத்தில் கொரோனா பெரும் தொற்று அளவுக்கு ஒரு உலகநெருக்கடியாக அந்த நாட்டில் கட்டுப்படுத்தக்கூடிய ஒருநிலைமையாக மாறும்.அவ்வாறான நிலைமைகளில் சுகாதார பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட எல்லோரும் அதற்குத் தேவையான  நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல  பதிலளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement