• May 04 2024

யாழில், பல்கலைக்கழக சிங்கள யுவதியை பதம்பார்த்த நாய் - வெளியான பரபரப்பு தகவல் ! samugammedia

Tamil nila / May 5th 2023, 8:36 pm
image

Advertisement

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தென்னிலங்கை சிங்கள மாணவி அந்தரங்க உறுப்பில் நாய் கடித்த நிலையில் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மாணவி சிகிச்சை பெற்ற வைத்தியசாலை ஊழியர்கள் சிலரால் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ் திருநெல்வேலிப் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் அறையில் தங்கியிருந்த மாணவியே நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளார். வீட்டு உரிமையாளரான பெண்மணியினால் வளர்க்கப்பட்ட உயர்சாதி நாய் ஒன்றே மாணவியை கடித்துக் குதறியுள்ளது.



இரவு நேரம் மாணவி அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அறைக்குள் வழமையாக வரும் அந்த நாய் திடீரென மாணவியின் சாப்பாட்டு தட்டை நோக்கி பாய்ந்துள்ளது.

இந்நிலையில் சாப்பாட்டு தட்டு தவறி வீழ்ந்த போது மாணவியை நாய் கடித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதேசமயம் ஒருவேளை நாய் அவ்வாறு கடித்திருந்தாலும் மாணவியின் அந்த பகுதியில் கடித்திருக்க வாய்ப்புக்கள் குறைவு என வைத்தியசாலை வட்டாரம் கூறுகின்றது.

மாணவியுடன் அதே அறையில் தங்கியிருந்த இன்னொரு சிங்கள மாணவி விடுமுறையில் வீடு சென்றுள்ளதாகவும், இதன் காரணமாக வீட்டு உரிமையாளரான பெண்மணியே மாணவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அத்துடன் நாய்க்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பாக நோய் அட்டைகளையும் பெண்மணி தன்னுடன் சென்றுள்ளார். இதனையடுத்து மாணவிக்கு சிகிச்சை அளித்த வைத்தியசாலை நிர்வாகம் நாய் கடிக்கான ஊசியை அரச வைத்தியசாலையில் மட்டுமே போட முடியும் என கூறியுள்ளது.



இதனால், குழப்பமடைந்த குறித்த மாணவி யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்லாது வேறு மாவட்ட வைத்தியசாலைக்கு செல்வதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

எனினும் நாய் முறையாகப் பராமரிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதால் மாணவிக்கு நோய் எதிர்ப்பு ஊசி போடவேண்டிய அவசியம் இல்லை என குறித்த வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.         

யாழில், பல்கலைக்கழக சிங்கள யுவதியை பதம்பார்த்த நாய் - வெளியான பரபரப்பு தகவல் samugammedia யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தென்னிலங்கை சிங்கள மாணவி அந்தரங்க உறுப்பில் நாய் கடித்த நிலையில் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.மாணவி சிகிச்சை பெற்ற வைத்தியசாலை ஊழியர்கள் சிலரால் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ் திருநெல்வேலிப் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் அறையில் தங்கியிருந்த மாணவியே நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளார். வீட்டு உரிமையாளரான பெண்மணியினால் வளர்க்கப்பட்ட உயர்சாதி நாய் ஒன்றே மாணவியை கடித்துக் குதறியுள்ளது.இரவு நேரம் மாணவி அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அறைக்குள் வழமையாக வரும் அந்த நாய் திடீரென மாணவியின் சாப்பாட்டு தட்டை நோக்கி பாய்ந்துள்ளது.இந்நிலையில் சாப்பாட்டு தட்டு தவறி வீழ்ந்த போது மாணவியை நாய் கடித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதேசமயம் ஒருவேளை நாய் அவ்வாறு கடித்திருந்தாலும் மாணவியின் அந்த பகுதியில் கடித்திருக்க வாய்ப்புக்கள் குறைவு என வைத்தியசாலை வட்டாரம் கூறுகின்றது.மாணவியுடன் அதே அறையில் தங்கியிருந்த இன்னொரு சிங்கள மாணவி விடுமுறையில் வீடு சென்றுள்ளதாகவும், இதன் காரணமாக வீட்டு உரிமையாளரான பெண்மணியே மாணவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.அத்துடன் நாய்க்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பாக நோய் அட்டைகளையும் பெண்மணி தன்னுடன் சென்றுள்ளார். இதனையடுத்து மாணவிக்கு சிகிச்சை அளித்த வைத்தியசாலை நிர்வாகம் நாய் கடிக்கான ஊசியை அரச வைத்தியசாலையில் மட்டுமே போட முடியும் என கூறியுள்ளது.இதனால், குழப்பமடைந்த குறித்த மாணவி யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்லாது வேறு மாவட்ட வைத்தியசாலைக்கு செல்வதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.எனினும் நாய் முறையாகப் பராமரிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதால் மாணவிக்கு நோய் எதிர்ப்பு ஊசி போடவேண்டிய அவசியம் இல்லை என குறித்த வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.         

Advertisement

Advertisement

Advertisement