• May 18 2024

ஜெலன்ஸ்கி தொடர்பில் லீக்கான இரகசிய செய்தி ; ஜேர்மன் பொலிஸில் பெரும் பரபரப்பு! samugammedia

Tamil nila / May 5th 2023, 8:11 pm
image

Advertisement

உக்ரைன் ஜனாதிபதி தொடர்பிலான இரகசிய செய்தி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து, ஜேர்மன் பொலிஸில் பரபரப்பு உருவாகியுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இம்மாதம் ஜேர்மன் தலைநகரான பெர்லினுக்கு வருகை புரியும் இரகசிய திட்டம் ஒன்று உள்ளதாம்.ஆனால், அந்த செய்தி உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகிவிட்டது. ஜேர்மன் ஜனாதிபதியின் வருகை குறித்து இதுவரை யாருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் கொடுக்காத நிலையில், பொலிஸாருக்கு மட்டுமே தெரிந்த அந்த தகவல் ஊடகங்களுக்கு லீக்கானதால் ஜேர்மன் பொலிஸில் பரபரப்பு உருவாகியுள்ளது.


பொலிஸ் துறையில் உள்ள யாரோ ஒருவர்தான் இந்த இரகசிய செய்தியை லீக் செய்திருக்கலாம் என பொலிஸார் கருதுகிறார்கள்.இது குறித்து பேசிய பெர்லின் பொலிஸ் துறைத் தலைவரான Barbara Slowik, ஒரு ஊழியர் மொத்த பெர்லின் பொலிஸ் துறைக்கும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் அவமானத்தை உருவாக்கிவிட்டார் என்பதை என்னால் சகித்துக்கொள்ள இயலவில்லை என்று கூறியுள்ளார்.

அவர் செய்த செயலால் எப்படிப்பட்ட ஏற்படவிருக்கும் பின்விளைவுகள் ஏற்படும் என்பது அவருக்கு தெரியாததாலேயே அவர் அப்படிச் செய்திருப்பார் என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார் அவர்.இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதியின் இரகசியப் பயணம் குறித்த செய்தி லீக்கானதால், உக்ரைன் தரப்பு விரக்தியடைத்துள்ளதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட உள்ளது.

ஜெலன்ஸ்கி தொடர்பில் லீக்கான இரகசிய செய்தி ; ஜேர்மன் பொலிஸில் பெரும் பரபரப்பு samugammedia உக்ரைன் ஜனாதிபதி தொடர்பிலான இரகசிய செய்தி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து, ஜேர்மன் பொலிஸில் பரபரப்பு உருவாகியுள்ளது.உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இம்மாதம் ஜேர்மன் தலைநகரான பெர்லினுக்கு வருகை புரியும் இரகசிய திட்டம் ஒன்று உள்ளதாம்.ஆனால், அந்த செய்தி உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகிவிட்டது. ஜேர்மன் ஜனாதிபதியின் வருகை குறித்து இதுவரை யாருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் கொடுக்காத நிலையில், பொலிஸாருக்கு மட்டுமே தெரிந்த அந்த தகவல் ஊடகங்களுக்கு லீக்கானதால் ஜேர்மன் பொலிஸில் பரபரப்பு உருவாகியுள்ளது.பொலிஸ் துறையில் உள்ள யாரோ ஒருவர்தான் இந்த இரகசிய செய்தியை லீக் செய்திருக்கலாம் என பொலிஸார் கருதுகிறார்கள்.இது குறித்து பேசிய பெர்லின் பொலிஸ் துறைத் தலைவரான Barbara Slowik, ஒரு ஊழியர் மொத்த பெர்லின் பொலிஸ் துறைக்கும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் அவமானத்தை உருவாக்கிவிட்டார் என்பதை என்னால் சகித்துக்கொள்ள இயலவில்லை என்று கூறியுள்ளார்.அவர் செய்த செயலால் எப்படிப்பட்ட ஏற்படவிருக்கும் பின்விளைவுகள் ஏற்படும் என்பது அவருக்கு தெரியாததாலேயே அவர் அப்படிச் செய்திருப்பார் என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார் அவர்.இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதியின் இரகசியப் பயணம் குறித்த செய்தி லீக்கானதால், உக்ரைன் தரப்பு விரக்தியடைத்துள்ளதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement