மாவனெல்லை - ஹெம்மாத்தகம வீதியில் நேற்று(18) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர் என்று மாவனெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென வீதிக்கு ஓடிய நாய் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இதையடுத்து, அந்த மோட்டார் சைக்கிள் பாதசாரியான பெண் மீது மோதியதுடன், அருகிலிருந்த கொங்கிரீட் கல்லில் மோதியது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரும், பின்புறத்தில் பயணித்தவரும், பாதசாரியான பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில், மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறுக்கால போன நாய்: பறிபோனது இளைஞனின் உயிர். மாவனெல்லை - ஹெம்மாத்தகம வீதியில் நேற்று(18) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர் என்று மாவனெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென வீதிக்கு ஓடிய நாய் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இதையடுத்து, அந்த மோட்டார் சைக்கிள் பாதசாரியான பெண் மீது மோதியதுடன், அருகிலிருந்த கொங்கிரீட் கல்லில் மோதியது.விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரும், பின்புறத்தில் பயணித்தவரும், பாதசாரியான பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில், மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.