• May 14 2024

கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து கோமாவில் இருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Nov 25th 2023, 9:11 pm
image

Advertisement

கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக  கோமாவில் இருந்தவர் இன்றையதினம்(25) உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் 2014ஆம் ஆண்டு டுபாய் - அபுதாபிக்கு சென்று அங்கு வேலை செய்து வந்த நிலையில் கடந்த 10.08.2022 அன்று மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் கோமா  நிலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இதுவரை காலமும் கோமா நிலையில் இருந்த நிலையில், கடந்த 17.11.2023 அன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

சடலமாது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து கோமாவில் இருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.samugammedia கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக  கோமாவில் இருந்தவர் இன்றையதினம்(25) உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,குறித்த குடும்பஸ்தர் 2014ஆம் ஆண்டு டுபாய் - அபுதாபிக்கு சென்று அங்கு வேலை செய்து வந்த நிலையில் கடந்த 10.08.2022 அன்று மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் கோமா  நிலைக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் இதுவரை காலமும் கோமா நிலையில் இருந்த நிலையில், கடந்த 17.11.2023 அன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.  சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement